www.garudabazaar.com

செம! டிவி சேனலில் ஒளிபரப்பாக போகும் "சார்பட்டா பரம்பரை" திரைப்படம்!!! எந்த சேனல்ல தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஆர்யா நடிப்பில் “சார்பட்டா பரம்பரை” திரைப்படம் கடந்த ஜூலை 22ம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது. இந்த படத்தை பா.இரஞ்சித் தயாரித்து இயக்கியுள்ளார், முரளி ஜி ஓளிப்பதிவு செய்துள்ளார், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

sarpatta parambarai movie television premiere

70 களில் சென்னையில் பிரபலமாக இருந்த சூளைப் பகுதியைச் சேர்ந்த இடியாப்ப நாயகர் பரம்பரைக்கும், ராயபுரம் பகுதியைச் சேர்ந்த சார்பட்டா பரம்பரைக்கும் இடையே நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகளே இந்த படத்தின் கதைக்களம்.

sarpatta parambarai movie television premiere

இந்த படத்தில் தோன்றிய கபிலன், டான்சிங் ரோஸ், வேம்புலி, மாரியம்மா, லெட்சுமி, ரங்கன் வாத்தியார், கெவின் டாடி உள்ளிட்ட பல கதாபாத்திரங்களை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

sarpatta parambarai movie television premiere

இந்நிலையில், இந்த படத்தின் தொலைக்காட்சி சேட்லைட் ஒளிபரப்பு உரிமையை கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் பெரிய விலைக்கு கைப்பற்றி உள்ளது. இதனை நடிகர் ஆர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கலைஞர் டிவி ஏற்கனவே ஆர்யா நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன், மதராசப்பட்டினம் படங்களின் ஒளிபரப்பு சேட்லைட் உரிமையை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

sarpatta parambarai movie television premiere

People looking for online information on Arya, Pa Ranjith, Sarpatta Parambarai, Udhayanidhi Stalin will find this news story useful.