www.garudabazaar.com

இன்னைக்கு தான் புஷ்பா படம் பார்த்தேன்.. நாட்டாமை கொடுத்த 'நச்' தீர்ப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நல்ல வரவேற்பு

Sarath Kumar praised actor Allu Arjun And Entire Pushpa team

கடந்த டிசம்பர் 17ஆம் தேதி  நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ரஷ்மிகாமந்தனா நடிப்பில் வெளிவந்த புஷ்பா படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தினை பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கியுள்ளார். மேலும் படத்தில் ஃபகத் பாசில் முக்கிய வில்லனாகவும் நடித்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படம், தற்போது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் ஐந்து மொழிகளில் உருவான இப்படம் எல்லா மொழிகளிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

எப்படி பார்த்தாலும் செம கூட்டணி!.. உதயநிதி - மாரி படத்திற்கு மியூசிக் யாருனு பாருங்க!

கடத்தல் கதை

இப்படம் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது படத்தின் பாடல்களும் ஆகும். இப்படத்தில் சமந்தாவின்  "ஓ சொல்றியா மாமா" பாட்டு இந்தியா முழுவதும் வைரல் ஹிட் அடிக்க, படமும் பெரிய அளவில் பரவியது. மேலும்  "சாமி சாமி" பாடலும் ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வந்தது. இப்படத்தில் முக்கியமான இரண்டு பாடல்கள் 5 மொழிகளிலுமே அம்மொழியை சேர்ந்த பாடகர்கள் பாடி உள்ளதால் பெரிய அளவில் ஹிட்டானது.

Sarath Kumar praised actor Allu Arjun And Entire Pushpa Film.

அதன்பின்  சந்தன கடத்தல் தொடர்பான கதையை மையபடுத்தி இருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து நல்ல வரவேற்பை பெற்றது. அல்லு அர்ஜூனின் நடிப்பு மற்றும் சுகுமாரின் இயக்கம் பலராலும் பாராட்டப்பட்டது. தேவிஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசையும் அற்புதமாக இருந்தால் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

செம வசூல்

சுமார் 200-250 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் தற்போது வரை 300 கோடிக்கு மேல் வசூலாகி உள்ளது.  இந்நிலையில் இப்படத்தை,  பல நடிகர்கள் பற்றும் சினிமா நட்சத்திரங்கள் பாராட்டி வந்த நிலையில், தற்போது சரத்குமாரும் படத்தை பார்த்து வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

Sarath Kumar praised actor Allu Arjun And Entire Pushpa Film.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர்  தான் சரத்குமார். இவர் தெலுங்கு, கன்னடம் மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். பல  படங்களைப் பார்த்து எப்பொழுதும் பாராட்டுகளை தெரிவிக்கும் சரத்குமார், சமீபத்தில் புஷ்பா படத்தை பார்த்த இவர் வெகுவாக பாராட்டியுள்ளார்.

வாவ்!!! அடுத்தடுத்து 2 படங்களா? இந்த வருஷம் கவுதம் மேனன் fans-க்கு டபுள் ட்ரீட்!!

பாராட்டிய  சரத்குமார்

நடிகர் சரத் குமார், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, "புஷ்பா படத்தை பார்த்தேன், சிறந்த நடிப்பு மற்றும் பொழுதுபோக்கு திரைப்படமாகும். நடிகர் அல்லு அர்ஜுன்,மைத்திரி மூவி மேக்கர்ஸ், படத்தின் இயக்குனர் மற்றும் ஒட்டுமொத்த நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு எனது பாராட்டுக்கள்", என தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது சினிமா ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Sarath Kumar praised actor Allu Arjun And Entire Pushpa Film.

 

Sarath Kumar praised actor Allu Arjun And Entire Pushpa team

People looking for online information on Allu Arjun, அல்லு அர்ஜுன், புஷ்பா படம், ரஷ்மிகாமந்தனா, Pushpa Film, Sarath Kumar will find this news story useful.