www.garudabazaar.com

அடிபொலி!!! அடுத்தது இப்படி ஒரு படமா? கதிருடன் கைகோர்க்கும் 'பேச்சுலர்' ஹீரோயின்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை : நடிகர் கதிர் மற்றும் நடிகை திவ்யபாரதி மெகா ஹிட்டான மலையாள படமான ISHQ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானதாக சூப்பரான தகவல் வெளிவந்துள்ளது.

kathir and Divyabharathi commited in tamil remake ishq.

பேச்சுலர் நாயகி

தமிழ் திரையுலகில் பேச்சுலர் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை திவ்யபாரதி. இவர் தனது திறமையான நடிப்பின் மூலம் பல ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதன் மூலம் பல படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றது. பேச்சுலர் படத்தில் G.V. பிரகாஷ் குமார்  திவ்யபாரதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படம் கடந்த டிசம்பர் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவந்தது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கியுள்ளார். இந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும், கதாநாயகியின் நடிப்புக்கு என்று தனியாக பாராட்டு கிடைத்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு பல தமிழ் சினிமாவின் பல இயக்குனர்கள் கண்களில் மிகவும்  பிரகாசமாக தெரிகிறார்.

kathir and Divyabharathi commited in tamil remake ishq.

 

ஏ.ஆர்.ரஹ்மான் மகளுக்கு நிச்சயதார்த்தம்!.. மாப்பிள்ளை யார் பாருங்க! வெளியான வைரல் Post!

ரசிகர்களுக்கு பதில்

சமீபத்தில் நடிகை திவ்யபாரதி இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதில் தன் முதல் படமான Bachelor படத்தின் அனுபவத்தை பற்றி பகிர்ந்து கொண்டார், G.V. பிரகாஷ் குமார் அருமையான மனிதர். தன் நடிப்புத்திறமையை மிகவும் பாராட்டுவார் எனவும், இப்படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களிடமும் அருமையான நட்பு ஏற்பட்டு தற்போது வரை தொடர்கிறது என்றும், மேலும் இந்தப்படத்தின் சுப்பு என்ற கதாபாத்திரம் தன் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக அமைந்துவிட்டது. ஏனென்றால், தனது முதல் படத்திலேயே எல்லாவிதமான நடிப்பையும் வெளிப்படுத்துவது அருமையானது என்று கூறினார். மேலும் இந்த படத்தில் எனது நடிப்பை முழுவதுமாக பயன்படுத்த எல்லா காட்சிகளும் அமைக்கப்பட்டிருந்ததை குறிப்பிட்டிருந்தார்.

kathir and Divyabharathi commited in tamil remake ishq.

 

குக் வித் கோமாளி "புகழ்" பகிர்ந்த வேற மாரி புகைப்படம்.. கொண்டாடும் அஜித் ரசிகர்கள்!

பட வாய்ப்புகள்

தனது அடுத்த படமும் தமிழில் தான் எனவும் தெலுங்கு, மலையாளம் படங்களில் நடிப்பதற்கு மிகவும் ஆசை என்று கூறினார்.  Bachelor படத்தின் கிளைமாக்ஸ் காட்சி என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது,  அது ரசிகர்களிடையே நல்ல மற்றும் கலவையான வரவேற்பையும் பெற்றது . அடுத்ததாக தொடர்ந்து 2 படங்களில் நடித்துக் கொண்டிருப்பதாகவும், அதில் பிக்பாஸ் மூலம் பிரபலமான முகேன் ராவ் உடன் சேர்ந்து நடித்துள்ளதாகவும் கூறினார். வரும் பிப்ரவரி மார்ச் மாதங்களில் படங்கள் வெளியாக வாய்ப்புகள் இருக்கிறது. இப்படத்தில் நடிக்க கிடைத்த வரவேற்பை மறக்க மாட்டேன் என்று கூறினார். இப்பட வெற்றிக்கு பிறகு பல படவாய்ப்புகள் இவருக்கு குவிந்து வருகின்றது.

kathir and Divyabharathi commited in tamil remake ishq.

ரீமேக்

மலையாளத்தில் மெகா ஹிட் ஆன ISHQ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும், அவருடன் நடிகர் கதிர் இணைத்திருப்பதாகவும் தகவல்கள்  வெளிவந்துள்ளது. இவர் மத யானை கூட்டம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள், பிகில் போன்ற வெற்றி படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ishq திரைப்படம் ரொமான்டிக் த்ரில்லர் படம். Shane Nigam மற்றும் Ann Sheetal முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.  Jakes Bejoy இசையமைக்க, Kiran Das எடிட்டராக பணியாற்றினார். இப்படத்தை அருண்ராஜ் மனோகர் இயக்கினார். மலையாளத்தில் மெகா ஹிட்டான இந்த படம் தற்போது தமிழில் உருவாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

kathir and Divyabharathi commited in tamil remake ishq.

People looking for online information on கதிர், திவ்யபாரதி, Bachelor, Divyabharathi, Ishq, Kathir will find this news story useful.