www.garudabazaar.com

வாவ்!!! அடுத்தடுத்து 2 படங்களா? இந்த வருஷம் கவுதம் மேனன் fans-க்கு டபுள் ட்ரீட்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை : கன்னட படத்திற்கு பிறகு, Kappela என்ற மலையாள சூப்பர் ஹிட் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றிய கவுதம் வாசுதேவ் மேனன்.

Kapeela Tamil remake rights acquired by Gautham Menon

முன்னணி இயக்குனர்

தமிழில் முன்னணி இயக்குனராக இருப்பவர் கவுதம் வாசுதேவ் மேனன். இவர் நடிகராக மட்டும் இல்லாமல் குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். தற்போது இவர் சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு என்ற படத்தை இயக்கி வருகிறார். பொதுவாக பிறமொழி படங்களை தமிழில் ரீமேக் செய்வதும், தமிழ் மொழி படங்களை பிற மொழிகளில் ரீமேக் செய்வது வழக்கமான ஒன்று. தமிழ் படங்களும் பெரும்பாலும் தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படும்.

Kapeela Tamil remake rights acquired by Gautham Menon

 

அடிபொலி!!! அடுத்தது இப்படி ஒரு படமா? கதிருடன் கைகோர்க்கும் 'பேச்சுலர்' ஹீரோயின்!

கன்னட படம்

சமீபத்தில் Garuda Gamana Vrishabha Vahana படத்தைப் பார்த்த இவர் இப்படத்தை ரீமேக் செய்ய விருப்பம் உள்ளதாக கூறி இருந்தார்.மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை  பெற்ற கவுதம் மேனன். தற்போது மலையாளப்படமான "Kappela" படத்தின் உரிமையை கைப்பற்றியுள்ளார்.

உரிமை பெற்ற கவுதம்

இப்படத்தை எழுதி இயக்கியவர் முஹம்மத் முஸ்தபா. இது இவரது அறிமுகப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் Anna Ben, Sreenath Bhasi, மற்றும் Roshan Mathew முக்கிய கதாபாத்திரத்தில் பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு சுசின் ஷியாம்  இசையமைத்துள்ளார். இப்படத்தின் கதை இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது.  டாக்சி டிரைவராக இருக்கும் விஷ்ணுவை கிராமத்து பெண்ணான ஜெஸ்ஸி தனக்கு வந்த ராங் கால் மூலம் பேசி பழகி பார்க்காமலேயே காதலிக்கிறார். அதன் பிறகு இருவர் வாழ்க்கையிலும் என்ன நடக்கிறது என்பதை பல சுவாரசியம்  கலந்த பதைபதைக்கும் ட்விஸ்ட்ளுடன் கொடுத்துள்ளார் இயக்குனர்.

Kapeela Tamil remake rights acquired by Gautham Menon

 

போடு வெடிய!!!! வேறலெவல் புகைப்படங்களுடன் வெளியான தனுஷ் - சம்யுக்தா பட ஷூட்டிங் அப்டேட்!

ரசிகர்கள் ஆவல்

மிக பெரிய ஹிட் கொடுத்த இந்த படம் தமிழில் தற்போது ரீமேக் ஆவது, ரசிகர்களுக்கு மிகவும் சந்தோசத்தை ஏற்படுத்தி உள்ளது.

வெந்து தணிந்தது காடு படத்திற்கு பிறகு, கவுதம் மேனன் கன்னடம், மலையாளம் என்று இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கைவசம் வைத்துள்ளார். மலையாளம் மற்றும் கன்னடத்தில் அந்த இரண்டு படங்களும் மெகா ஹிட் ஆனதை தொடர்ந்து,  கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியாக போகும் இந்த படங்கள் பிளாக் பஸ்டர் படங்களாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

Kapeela Tamil remake rights acquired by Gautham Menon

தொடர்புடைய இணைப்புகள்

Kapeela Tamil remake rights acquired by Gautham Menon

People looking for online information on கவுதம் மேனன், தமிழ் ரீமேக், GVM, Kapeela, Malayalam hit movie, Remake will find this news story useful.