www.garudabazaar.com

'பொன்னியின் செல்வன்' சிறு வயது நந்தினியாக பிரபல இளம் நடிகை.. டிரெய்லர்ல கவனிச்சீங்களா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான  மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.

Sara Arjun Doing Childhood Nandini Role in Ponniyin Selvan

Also Read | "PS-ல இந்த கேரக்டர் நான் பண்ணவானு கேட்டேன்.. மணி சார் ஒத்துக்கவே இல்ல.!"- ரஜினி..

முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் முதல் லுக் கதாபாத்திர போஸ்டர்கள், டீசர், சிங்கிள் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்த படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். 

Sara Arjun Doing Childhood Nandini Role in Ponniyin Selvan

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடிக்கிறார்கள்.

Sara Arjun Doing Childhood Nandini Role in Ponniyin Selvan

முழு வீச்சில் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பு பல நகரங்களில் பல கட்டங்களாக நடைபெற்றது. இதில் பல கட்ட படப்பிடிப்புகள் பாண்டிச்சேரி, ஐத்ராபாத், குவாலியர், ஆர்ச்சா, மகேஸ்வர், பொள்ளாச்ச்சி, உடுமலை, மைசூர் நகரங்களில் நடந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவுற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

Sara Arjun Doing Childhood Nandini Role in Ponniyin Selvan

இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா நேற்று செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி நேரு உள் விளையாட்டரங்கில்  பிரம்மாண்டமாக நடைபெற்றது.

Sara Arjun Doing Childhood Nandini Role in Ponniyin Selvan

டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள நந்தினி கதாபாத்திரத்தின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடிகை சாரா அர்ஜூன் நடித்துள்ளார். டிரெய்லரில் சாரா தோன்றும் காட்சி இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சாரா, ஏற்கனவே தெய்வத் திருமகள், சில்லுக் கருப்பட்டி, சைவம் படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read | ஒரே மேடையில் ஐஸ்வர்யா ராய் & த்ரிஷா.. ரஜினி, கமல் குறித்து மாஸ் பேச்சு!

தொடர்புடைய இணைப்புகள்

Sara Arjun Doing Childhood Nandini Role in Ponniyin Selvan

People looking for online information on Aishwarya rai, Ponniyin Selvan Nandhini, Ponniyin Selvan part 1, Ponniyin Selvan Trailer Launch, Sara Arjun will find this news story useful.