www.garudabazaar.com

ஒரே மேடையில் ஐஸ்வர்யா ராய் & த்ரிஷா.. ரஜினி, கமல் குறித்து மாஸ் பேச்சு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, முன்னணி இயக்குனரான மணிரத்னம், பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.

Trisha Talking about Kamal Haasan Rajinikanth in PS 1 Trailer launch

Also Read | "Ponniyin Selvan 2000 page'னு சொன்னாங்க, அட போயா'னு விட்டுட்டேன், அப்புறமா ஜெயலலிதா தான்".. PS1 மேடையில் ரஜினி!!

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இதன் முதல் பாகமான 'பொன்னியின் செல்வன் - பாகம் 1', செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திரை அரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, லால், ஜெயராம், ரஹ்மான் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும்  நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.

Trisha Talking about Kamal Haasan Rajinikanth in PS 1 Trailer launch

இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரவிவர்மன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், நேற்று இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா, நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த விழாவில், உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர்கள் ஷங்கர், மிஷ்கின், நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ் ஹைத்ரி என ஏராளமான திரை பிரபலங்கள், பொன்னியின் செல்வன் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

Trisha Talking about Kamal Haasan Rajinikanth in PS 1 Trailer launch

இந்த படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் மற்றும் த்ரிஷா ஆகியோர் ஒன்றாக மேடையில் தோன்றி இருந்தனர்.

இந்நிகழ்வில் நடிகை த்ரிஷா பேசியது:

"இந்தக் கூட்டத்தை பார்க்கும் போது முதலில் என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறது. ரஜினி சார் கமல் சாரை எத்தனை முறை பார்த்தாலும் ஒவ்வொரு முறையும் வாவ் என்றே சொல்ல வைக்கிறது.

Trisha Talking about Kamal Haasan Rajinikanth in PS 1 Trailer launch

2கே கிட்ஸ் முதல் அனைவருக்குமே இந்த படம் சிறப்புரிமை, ஆசீர்வாதம், சிறந்த படம் என்று நான் என்ன வார்த்தை கூறினாலும் எனக்கு அது குறைவாகவே தோன்றுகிறது. அதைத்தாண்டி அதற்கு குறவாகவே தோன்றுகின்றது. அதை தாண்டி உள்ளுக்குள் ஒரு அலாதியான இன்பம் வருகிறது.

இந்த வாய்ப்பை கொடுத்த மணி சாருக்கு மிக்க நன்றி" என த்ரிஷா பேசினார்.

Also Read | "அப்பவே எம்.ஜி.ஆர் சொன்னாரு, எனக்கு தான் புரியல".. Ponniyin Selvan சீக்ரெட் உடைத்த கமல்!!

தொடர்புடைய இணைப்புகள்

Trisha Talking about Kamal Haasan Rajinikanth in PS 1 Trailer launch

People looking for online information on Kamal Haasan, Ponniyin Selvan part 1, Ponniyin Selvan Trailer Launch, PS 1 Trailer launch, Rajinikanth, Trisha Krishna will find this news story useful.