www.garudabazaar.com

“வடிவேலு படத்துக்கு இசையமைக்கிறேன்”.. “ஓவரா பேசிடுவேன்”!.. சந்தோஷ் நாராயணன்!.. Video

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி தொடர்பான பிரச்சனைகள் சுமுகமாக முடிவடைந்த நிலையில், நடிகர் வடிவேலு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வமாகியுள்ளார்.

Santhosh Narayanan music for Vadivelu movie opens up video

அவரது தீவிர ரசிகர்கள் அவரது படத்துக்காக காத்திருக்க முடியாமல் ஆவலாக உள்ளனர். இந்நிலையில் தான் லைகா தயாரிக்கும் அடுத்த 2 படங்களில் நடிக்கும் வடிவேலு, சுராஜ் இயக்கத்தில் நடிக்கும் நாய் சேகர் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பதாக அறிவித்துள்ளார்.

நடிகவர் வடிவேலுவின் 61வது பிறந்த நாள் விழாவில் இந்த தகவலை வெளியிட்டு பேசிய பின்னர், சந்தோஷ் நாராயணன் நிகழ்வில் கலந்துகொண்டு பேசினார். அதில், “நானும் இயக்குநர் நலன் குமாரசாமியும் வடிவேலு குறித்து நிறைய பேசுவோம்.

அவர் தலைமுறைகளை தாண்டி மீம்ஸ் உள்ளிட்ட வெவ்வேறு வடிவங்களில் வாழும் ஸ்டார் அவர். நான் மக்களுடன் தினமும் பழுகுகிறேன். அதனால் இதை சொல்கிறேன். தத்துவ ரீதியாக செய்தாரா என தெரியவில்லை வின்னர் படத்தில் அவ்வளவு விஷயங்கள் உள்ளன. நான் ஓவராக பேசிடுவேன்.

உண்மையில் அவருக்குள் ஒரு நாட்டுப்புற கலைஞர் இருக்கிறார். அவரை இந்த படத்தின் பாடல்களில் பயன்படுத்திக்கொள்ளவிருக்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக சுராஜுடன் போனில் பேசும்போது, “என் தலைவன் வடிவேலு எங்க? அவர்கிட்ட கொடுங்க” என சந்தோஷ் நாராயணன் ஆர்வமாக இருந்ததாக வடிவேலு குறிப்பிட்டு நெகிழ்ந்தார். சந்தோஷ் நாராயணன் மற்றும் வடிவேலு பேசும் முழு வீடியோவை இணைப்பில் காணலாம்.

Also Read: "ட்விட்டர்ல இருக்கனா?".. "நாய் சேகர்-க்கு மியூசிக் இவரா?".. பிறந்தநாளில் வடிவேலு .. மாஸ் அப்டேட்..!

“வடிவேலு படத்துக்கு இசையமைக்கிறேன்”.. “ஓவரா பேசிடுவேன்”!.. சந்தோஷ் நாராயணன்!.. VIDEO வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Santhosh Narayanan music for Vadivelu movie opens up video

People looking for online information on NaaiSekar, Santhosh Narayanan, Suraj, Trending, Vadivelu will find this news story useful.