www.garudabazaar.com

"ட்விட்டர்ல இருக்கனா?".. "நாய் சேகர்-க்கு மியூசிக் இவரா?".. பிறந்தநாளில் வடிவேலு .. மாஸ் அப்டேட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி திரைப்பட உருவாக்கம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், நடிகர் வடிவேலு, இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் 'நாய் சேகர்' என தலைப்பு வைக்கப்படுவதாக கூறப்படும் புதிய திரைப்படத்தில் நடிக்கிறார்.

vadivelu in santhosh narayanan music not in twitter video

இந்த படக்குழுவினரோடு இன்று தமது 61-வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய வடிவேலு பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்நிகழ்வில் பல்வேறு திரைத்துறை பிரபலங்கள் கலந்துகொண்டு வடிவேலுவை வாழ்த்தினர்.

இந்த பிறந்த நாள் பார்ட்டியில் பேசியுள்ள வடிவேலு, இந்த பிறந்த நாள் புதிதாக பிறந்தது போல் இருப்பதாகவும், மக்களின் கஷ்டங்களை ஒப்பிடும்போது தன் கஷ்டம் மிகவும் சாதாரணம் என்றும், இன்னும் வித்தியாசமான கெட்டப்களை போட்டு மக்களை மகிழ்விக்க வேண்டும் என்றும், இன்னும் சூனா பானா கேரக்டர் போன்ற எனர்ஜி இருப்பதாகவும், கலைத்தாயும் தானும் பிரிந்து மீண்டும் சேர்ந்துள்ளதாகவும் நெகிழ்ந்துள்ளார்.

தவிர, ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளம் எதிலும் தான் இல்லையென்றும், அப்படி போலியாக இருக்கும் எதையும் நம்பவேண்டாம் என்றும் வடிவேலு கூறியுள்ளார். இப்போதைக்கு லைகாவின் தயாரிப்பில், நாய் சேகர் உள்ளிட்ட 2 படத்தில் மட்டும்தான் ஹீரோவாக நடிக்கவிருப்பதாகவும் அதன் பிறகு காமெடியானகவே தொடரப்போவதாகவும், குறிப்பாக ஹிஸ்டாரிக்கல் படங்களில் ஹீரோவாக நடிக்கவே போவதில்லை, அது கலைத்தாயின் மீது ஆணை என்றும் வடிவேலு தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வடிவேலு நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகும் நாய் சேகர் என பெயரிடப்படவுள்ள படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவிருப்பதாகவும் இயக்குநர் சுராஜ் மற்றும் வடிவேலு தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் வடிவேலு பாடவிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் வடிவேலு பேசிய கலகலப்பான வீடியோவை இணைப்பில் காணலாம்.

"ட்விட்டர்ல இருக்கனா?".. "நாய் சேகர்-க்கு மியூசிக் இவரா?".. பிறந்தநாளில் வடிவேலு .. மாஸ் அப்டேட்..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

vadivelu in santhosh narayanan music not in twitter video

People looking for online information on NaaiSekar, NaaiShekar, Suraaj, Vadivelu, VadiveluBirthday will find this news story useful.