www.garudabazaar.com

நடிகர் சேதுராமன் பிறந்தநாள்... நடிகர் சந்தானம் அவருக்காக என்ன செய்திருக்கிறார் பாருங்க...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகரும், மருத்துவருமான சேதுராமன் நேற்று மாரடைப்பு காரணமாக காலமானர். இவர் 2013-ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் ஹீரோவாக சந்தானம் உடன் நடித்திருந்தார். வாலிப ராஜா, 50/50 போன்ற சில படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் இவரை நடிகராய் தெரிந்த பலருக்கும் இவர் ஒரு புகழ்பெற்ற தோல் மருத்துவர் என்பது தெரியாது. இவருக்கு திருமணமாகி குழந்தை இருக்கிறது. சேதுராமன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த செய்தி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாய் விழுந்தது.

santhanams sweet gesture to friend sethuraman நண்பர் சேதுவுக்காக சந்தானம் செய்த செயல்

நடிகர் சேதுராமனின் இறப்பு அவரது நெருங்கிய நண்பரான நடிகர் சந்தானத்தை நொறுக்கி விட்டது என்றே  சொல்லலாம். இறுதி சடங்குகளை முன்நின்று நடத்தி, அவரது உடலை சந்தானம் சுமந்து சென்ற காட்சி அனைவரையும் கலங்க வைத்தது. இந்நிலையில் சேதுராமன் பிறந்தநாளான இன்று ஈசிஆரில் அவரது புதிய கிளினிக் ஒன்றை அவர் தொடங்கி வைத்துள்ளார் சந்தானம். இந்த செய்தியை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

santhanams sweet gesture to friend sethuraman நண்பர் சேதுவுக்காக சந்தானம் செய்த செயல்

People looking for online information on Santhanam, Sethuraman will find this news story useful.