Battery
The Legend
Maha others
www.garudabazaar.com

வித்தியாசமான லுக்கில் சந்தானம் நடிக்கும் 'குலுகுலு'.. வெளியான செம மாஸ் SNEAK PEEK!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சந்தானம் நடிக்கும் குலு குலு படத்தின் SNEAK PEEK ரிலீசாகி உள்ளது.

Santhanam Starring GuluGulu Movie Sneak Peek

Also Read | VIDEO: துல்கர் சல்மான் நடிக்கும் PAN INDIA படம்.. கார்த்தி வெளியிட்ட கலர்ஃபுல் தமிழ் டிரெய்லர்!

விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சியில் இருந்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் சந்தானம்.

சிம்பு நடிப்பில் வெளிவந்த மன்மதன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னாட்களில் முன்னணி நகைச்சுவை நடிகராக வளர்ச்சி பெற்றார்.

பின்னர் ஹீரோவாக கண்ணா லட்டு திண்ண ஆசையா, தில்லுக்கு துட்டு போன்ற காமெடி  திரைப்படங்களில்  நடித்து வந்தார். சமீபத்தில் பிஸ்கோத்து, பாரிஸ் ஜெயராஜ், சபாபதி மற்றும் டிக்கிலோனா திரைப்படங்களில் சந்தானம் ஹீரோவாக நடித்திருந்தார்.

தற்போது ஆக்‌ஷன், காமெடி, த்ரில்லர் என அனைத்து ஜானர்களிலும் சந்தானம் நடித்து வருகிறார். 

சந்தானம் நடிப்பில் மேயாத மான் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனரும், விக்ரம, மாஸ்டர் படங்களின் எழுத்தாளருமான ரத்னகுமார் இயக்கத்தில் "குலு குலு"  திரைப்படம் உருவாகி உள்ளது.

இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த படம் ஜூலை 29-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் பட ரிலீஸை ஒட்டி படத்தின் ஒரு காட்சி மட்டும் SNEAK PEEK ஆக ரிலீஸ் ஆகி உள்ளது.

Santhanam Starring GuluGulu Movie Sneak Peek

ரோட்டோரத்தில் உள்ள தள்ளுவண்டி கடையில் உணவு உண்ணும் சந்தானம், கைக்குழந்தை உடன் பிச்சை எடுக்கும் ஒரு பெண்ணுக்கு உணவு வாங்கி கொடுக்கிறார். அந்த உணவை போலீஸ் ஒருவர் மிதித்து தட்டி விட.. அந்த போலீசை அடிக்க பிச்சை எடுக்கும் பெண் சந்தானத்தை தூண்டிவிடுவது போல் இந்த காட்சி அமைந்துள்ளது.

இந்த குலுகுலு திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை பிரபல டிவி சேனலான சன்.டிவி. கைப்பற்றியுள்ளது.  இந்த படத்தின் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் OTT உரிமத்தை சன் நெட்வொர்க்கின் சன் நெக்ஸ்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Also Read | "6 வருசத்துக்கு அப்பறம் இந்த கெட்-அப்".. செம்ம ஸ்மார்ட் லுக்கில் கார்த்தி வெளியிட்ட போட்டோ!

வித்தியாசமான லுக்கில் சந்தானம் நடிக்கும் 'குலுகுலு'.. வெளியான செம மாஸ் SNEAK PEEK! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Santhanam Starring GuluGulu Movie Sneak Peek

People looking for online information on Gulu Gulu, Gulu Gulu Movie Sneak Peek, Santhanam will find this news story useful.