www.garudabazaar.com

"சந்தானத்தின்" நடிப்பில் உருவான புதிய படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறதா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சபாபதி'. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகியிருந்தது.

Santhanam Sabhaapathy direct OTT release here is what we know

முன்னதாக 'பிஸ்கோத்' படத்தில் நடித்த சந்தானம் அந்த படத்தைத் தொடர்ந்து 'டிக்கிலோனா', 'பாரிஸ் ஜெயராஜ்' படங்களில் நடித்தார். இதில் பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் திரையரங்கில் நேரடியாக வெளியானது. டிக்கிலோனா திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

இதனிடையே புதுமுக இயக்குநர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் சந்தானம் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் தான் சபாபதி.  தந்தை - மகன் புரிதலை மையப்படுத்தி ஆர்.கே.எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சந்தானத்துக்குத் தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ளார்.

Santhanam Sabhaapathy direct OTT release here is what we know

இவர்களுடன் ஷாயாஜி ஷிண்டே, வம்சி கிருஷ்ணன், லொள்ளு சபா சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜூலை மாதம், சோனி லைவ் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: ஸ்டார்ட் மியூசிக்.. "தளபதி65" பட ஹீரோயின் பதிவிட்ட செம்ம அப்டேட்! வைரல் ஃபோட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

Santhanam Sabhaapathy direct OTT release here is what we know

People looking for online information on Dikkiloona, Parris Jeyaraj, Sabhaapathy Tamil, Sam CS, Santhanam will find this news story useful.