www.garudabazaar.com

ஸ்டார்ட் மியூசிக்.. "தளபதி65" பட ஹீரோயின் பதிவிட்ட செம்ம அப்டேட்! வைரல் ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'தளபதி 65' என்று இதுவரை அழைக்கப்பட்ட இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படத்தின் தலைப்பு சமீபத்தில் 'பீஸ்ட்' என்று ரிவீல் செய்யப்பட்டது.

Pooja hegde dance rehearsal viral pic beast vijay thalapathy65

நடிகர் விஜய், ஸ்டைலாக துப்பாக்கியுடன் இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி வைரலானது.

இப்படத்தில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,  ஜூலை 1 முதல் பாடல் காட்சியுடன் இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கி பின்னர் முக்கியமான காட்சிகளுக்கு இப்படக்குழுவினர் செல்லவிருக்கின்றனர். ஒரு முக்கியமான பாத்திரத்தில் யோகி பாபு நடித்து அசத்தவிருக்கிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பீஸ்ட் படத்திற்கு தேசிய விருது பெற்ற ஸ்டண்ட் இயக்குநர்கள் இரட்டையர் அன்பறிவ் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர். நண்பன் பட புகழ் மனோஜ் பரமஹம்சா இந்த படத்திற்கான ஒளிப்பதிவு செய்கிறார்.

மேலும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்க, பிரபல தெலுங்கு ஹிட் பாடலான புட்ட பொம்மா பாடலின் நடன இயக்குனர் ஜானி மாஸ்டர், நடன பயிற்சி அளிக்கிறார். இந்நிலையில் தான் நடிகை பூஜா ஹெக்டே, பீஸ்ட் படப்பிடிப்புக்காக தனது நடன ஒத்திகைகளைத் தொடங்கியதை பற்றி தமது இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் பதிவிட்டதை அடுத்து அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Pooja hegde dance rehearsal viral pic beast vijay thalapathy65

People looking for online information on BEASTFirstLook BeastSecondLook ThalapathyVijay, Nelson Dilipkumar, Pooja Hegde, Vijay will find this news story useful.