நடிகை சமந்தா முதல் முறையாக ஒரு பேய் படத்தில் நடிப்பது பற்றிய தகவல் தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருவபர் சமந்தா. இவர் நடித்த கத்தி, தெறி உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. அதுமட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் இவர் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் வெளியான 96 படத்தின் ரீமேக்கான ஜானு படத்தில் சமந்தாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில் சமந்தா அடுத்து நடிக்கவிருக்கும் படத்தை பற்றிய தகவல் தெரியவந்துள்ளது. மாயா, கேம் ஓவர் படங்களை இயக்கிய அஷ்வின் சரவணன் இத்திரைப்படத்தை இயக்குவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இத்திரைப்படத்தில் நடிகர் பிரசன்னாவும் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இதனிடையே இதுபற்றி ட்விட்டரில் வந்த கருத்துக்கு பதிலளித்த சமந்தா, பேய் படத்திலும் இது வேற மாதிரி இருக்கும் என தெரிவித்துள்ளார்.
It’s going to be much more than just a horror film 🙏🥰 https://t.co/sNq2608B9S
— Samantha Akkineni (@Samanthaprabhu2) February 26, 2020