www.garudabazaar.com

'சூரரைப் போற்று' படம் பார்த்த நடிகை சமந்தா... யாரைப் பத்தி புகழ்ந்து பேசி இருக்காங்க பாருங்க..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவு அளித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு மரண மாஸ் படத்தை பார்த்த ரசிகர்கள் குஷியில் உள்ளனர். விமர்சகர்களும் படத்தை பாராட்டி எழுதி வருகின்றனர்.

samantha review on soorarai pottru சூரரைப் போற்று' படம் பார்த்த சமந்தா

இந்தியாவில் முதன் முறையாக பட்ஜெட் பிளைட்டை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத் என்பவரின் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை சமந்தா, சூரரைப் போற்று படத்தை பற்றிய ஒரு பதிவிட்டுள்ளார். அவர் கூறும் பொழுது "இந்த வருடத்தின் சிறந்த படம் சூரரைப் போற்று. விலையுயர்ந்த மாணிக்கம் போன்றது. சூர்யாவிற்கு எனது வணக்கங்கள்,  சுதா கொங்கரா என் இதயத்தை பிடித்துவிட்டார், அபர்ணாவுக்கு பூங்கொத்துகள். எனக்கு தேவையான ரியல் ஊக்கத்தை இந்த படம் கொடுத்துள்ளது" என்று கூறியுள்ளார்.

 

தொடர்புடைய இணைப்புகள்

samantha review on soorarai pottru சூரரைப் போற்று' படம் பார்த்த சமந்தா

People looking for online information on Samantha, Soorarai Pottru will find this news story useful.