www.garudabazaar.com

சூரரைப் போற்று படத்தை பற்றி கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் பதிவு... "என் நண்பர்களுக்கு ஏமாற்றம்"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவு அளித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு மரண மாஸ் படத்தை பார்த்த ரசிகர்கள் குஷியில் உள்ளனர். விமர்சகர்களும் படத்தை பாராட்டி எழுதி வருகின்றனர்.

Captain Gopinath on soorarai pottru film கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் பதிவு

இந்தியாவில் முதன் முறையாக பட்ஜெட் பிளைட்டை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத் என்பவரின் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். இந்நிலையில் ரியல் லைப் நெடுமாறன் கேப்டன் கோபிநாத் சூரரைப்போற்று படத்தை பற்றி நெகிழ்ச்சியாக கடந்த வாரம் எழுதி இருந்தார். இந்நிலையி அவர் இப்போது மேலும் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் "சூரரை போற்று படம் எனது வாழ்க்கையில் நடந்தவையாக Simply Fly புத்தகத்தில் கூறிப்பட்ட சம்பவங்களை அப்படியே காட்டவில்லையே என்று சிலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நான் அவர்களிடம் சொன்னேன் இது சினிமாவுக்காக கற்பனை கலந்து எடுக்கப்பட்டுள்ளது, ஆனால் 'மசாலா'வுக்கு கீழே நல்ல இறைச்சி இருக்கிறது!" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Captain Gopinath on soorarai pottru film கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் பதிவு

People looking for online information on Soorarai Pottru will find this news story useful.