'ஜகமே தந்திரம்', 'கர்ணன்' படங்களுக்கு பிறகு மீண்டும் பாலிவுட்டில் 'அட்ராங்கி ரே' (Atrangi Re) படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தை 'ராஞ்சனா' பட இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் அக்ஷய் குமார், சயீஃப் அலிகானின் மகள் சாரா அலிகான் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்த படம் வருகிற 2021 ஆம் ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகை சாரா அலிகான் தனது தம்பி இப்ராஹிமிற்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபோட்டோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், 'பிறந்தநாள் வாழ்த்துகள் பிரதர். உனக்கு தெரிந்ததை விட அதிகமாக உன்னை நேசிக்கிறேன். இன்று உன்ன ரொம்ப மிஸ் பண்றேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags : Saif Ali Khan, Sara Ali Khan, Ibrahim