ஜெயம் ரவி நடித்த ’தாம் தூம்’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்த நடிகை சாய் பல்லவிக்கு கதாநாயகியாக அறிமுகமான 'பிரேமம்' படம் பெரும் புகழை பெற்றுத்தந்தது. நடனம் மீது ஆர்வம் கொண்ட அவர் ஆரம்பத்தில் ஒரு தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். ’மாரி 2’ படத்தில் இவர் ஆடிய ‘ரவுடி பேபி’ பாடல் யூட்யூபில் 750 மில்லியன் வ்யூவர்களை தாண்டி புதிய சாதனை படைத்தது. தென்னிந்தியா முழுவதும் இவர் நடிப்புக்கும் நடனத்துக்கும் ரசிகர் பட்டாளம் உள்ளது.

இந்நிலையில் ஃபோர்ப்ஸ் இந்தியா (Forbes India) இணையதளம் வெளியிட்டுள்ள Forbes India 30 Under 30 பட்டியலில் சாய் பல்லவி சேர்த்துள்ளது. இந்திய அளவில் 30 வயதுக்கு கீழ் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். சுமார் 255 பேரின் பங்களிப்பை பரிசீலித்து இந்த பட்டியலை உருவாக்கியுள்ளதாக ஃபோர்ப்ஸ் இந்தியா இணையம் தெரிவித்துள்ளது.
27 வயதான சாய் பல்லவியுடன் இந்த பட்டியலில், கவுரவ் சவுதரி எனும் யூட்யூபர், ராப்பிடோ சேவை நிறுவனர்கள உள்ளிட்ட 30 பேர் இடம்பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் இடம்பிடிப்பது தனக்கு பெரும் கெளரவமளிப்பதாக சாய் பல்லவி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
I’m humbled and honoured to be listed in Forbes 30 Under 30 ! @forbes_india #ForbesIndia30U30 https://t.co/xPU8Tq9vsc
— Sai Pallavi (@Sai_Pallavi92) February 7, 2020