அஜித் குறித்து அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சுக்கு பிரபல நடிகர் கமெண்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தேவையும் சூழ்நிலையும் தேவையும் வந்தால் நாங்கள் இருவரும் அரசியலில் இணைந்து பயணிப்போம் என்று நடிகர்கள் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் தெரிவித்தனர். இது சமூகத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது.

S Ve Shekher Comments Jaya Kumar's speech About Ajith

அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இது பற்றி எங்களுக்கு பிரச்சனையில்லை. அதிமுக தலைமையிலான கூட்டணி பலமிக்க கூட்டணி.

இந்த கூட்டணியின் முன்னாள் இதுவெல்லாம் தூள் தூளாகி விடும். ரஜினி, கமல், விஜய் உள்ளிட்டோர் மாயபிங்கள். அஜித்தை பொறுத்தவரை அவர் டீஸன்ட் ஆக்டர். அவர் தொழிற்பக்தி அவருக்கு அதிகம்.

இதற்கு பதிலளித்த நடிகர் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''Start Music. என்ன அடுத்த தலைவர் ரெடியா ? இது தான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி சொன்னேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.