தனது மதிமயக்கும் இனிமையான குரலால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர் எஸ்.ஜானகி. தமிழ், தெலுங்கு, கன்னடம். மலையாளம், ஹிந்தி, பெங்காலி என பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.

தமிழ் சினிமாவில் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் என தமிழின் நான்கு தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்துள்ளார். இளையராஜாவின் இசையில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் மைசூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்ததாகவும், அங்கு தவறி விழுந்து அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.இதனையடுத்து மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.ஜானகி அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது சிகிச்சை முடிந்ததைத் தொடர்ந்து சனிக்கிழமை வீடு திரும்பினார்.