Jail Others
IKK Others
MKS Others
www.garudabazaar.com

அடடே! RRR படத்துக்கு சொந்த குரலில் தமிழ் டப்பிங் பேசிய Jr NTR - ராம் சரண்! வெளியான சுவாரஸ்ய தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த வருடத்தின் இந்திய பிரமாண்டம் ரசிகர்கள் கொண்டாட காத்திருக்கும் வரலாற்று திரை அனுபவம், பாகுபலியின் பிரமாண்டத்திற்கு பிறகு இயக்குநர் ராஜமௌலியின் அடுத்த படைப்பு RRR ( இரத்தம் ரணம் ரௌத்திரம்).

RRR (Raththam Ranam Rowthiram) Press Meet Jr NTR Ram Charan

இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் பிரமாண்ட படைப்பாக Lyca Productions சார்பில் திரு. சுபாஸ்கரன் அல்லிராஜா & DVV Entertainment சார்பில் திரு. தானய்யா ஆகியோர் இப்படத்தை இணைந்து வழங்குகிறார்கள். இந்திய திரைத்துறையில் மொழி, மாநில எல்லைகள் கடந்து இந்தியாவில் உள்ள அனைத்து ரசிகர்களும் எதிர்பார்க்கும் படைப்பு RRR ( இரத்தம் ரணம் ரௌத்திரம்) திரைப்படம். தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான ஜூனியர் என் டி ஆர், ராம்சரண் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் “RRR” திரைப்படத்தில் பாலிவுட் முன்னணி நாயகி ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா, நடிகர் சமுத்திரகனி உட்பட பல முன்னணி நடசத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி பிஃக்சனாக இந்த படம் உருவாகிறது.

RRR (Raththam Ranam Rowthiram) Press Meet Jr NTR Ram Charan

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, தற்போது படத்தின் முன் வெளியீட்டு பணிகள் துவங்கியுள்ளன. ஜனவரி 7 ஆம் தேதி உலகமெங்கும் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் வெளியாகிறது.  நேற்று சென்னையில், இப்படத்தின் தமிழ் பதிப்ற்கான , பிரமாண்ட முன்னோட்ட விழாவில், இயக்குநர் S S ராஜமௌலி, Lyca Productions சார்பில் தமிழ்குமரன், தயாரிப்பாளர் NV பிரசாத், DVV Entertainment சார்பில் தயாரிப்பாளர் தானய்யா, நடிகர் ராம்சரண், நடிகர் ஜீனியர் என் டி ஆர், ஆலியாபட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

RRR (Raththam Ranam Rowthiram) Press Meet Jr NTR Ram Charan

படம் குறித்து பல கேள்விகளுக்கு இவர்கள் பதில் அளித்தனர்.  மேலும் இந்த படத்திற்கு ராம்சரண், ஜூனியர் NTR தமிழிலே சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளனர். இதுகுறித்து நடிகர் ராம்சரண் பேசியதாவது…"நான் சென்னையில் தான் பிறந்தேன். தமிழ் என் இரண்டாவது தாய்மொழி, இப்படத்தில் தமிழில் பேசியது மிகச்சிறப்பான அனுபவமாக இருந்தது. மிக மிக சந்தோஷமாக இருந்தது. தமிழ் ரசிகர்களும் இப்படத்தை கொண்டாடுவார்கள்", என்றார்.

இதுகுறித்து நடிகர் ஜீனியர் என் டி ஆர் பேசியதாவது…''தென்னிந்திய சினிமா பிறந்தது சென்னையில் தான். சிரஞ்சீவி சார் பிறந்ததே இங்கு தான். தமிழுக்கும் சினிமாவுக்குமான தொடர்பு மறுக்கமுடியாதது. இப்படத்தில் கார்கி, விஜய் மிகச்சிறப்பாக எங்களுக்கு தமிழ் சொல்லி தந்தார்கள். தமிழை சரியாக கஷ்டப்பட்டு பேசியிருக்கிறேன். தமிழ் ரசிகர்கள் கண்டிப்பாக ரசிப்பார்கள்'', என்றார்.

 

அடடே! RRR படத்துக்கு சொந்த குரலில் தமிழ் டப்பிங் பேசிய JR NTR - ராம் சரண்! வெளியான சுவாரஸ்ய தகவல்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

RRR (Raththam Ranam Rowthiram) Press Meet Jr NTR Ram Charan

People looking for online information on Jr ntr, Rajamouli, Ramcharan, RRR, RRR Tamil Dubbing will find this news story useful.