Jail Others
IKK Others
MKS Others
www.garudabazaar.com

சென்சாரான பாகுபலி ராஜமௌலி இயக்கும் PAN இந்தியா 'RRR' படம்! எத்தனை மணி நேரம் ஓடும் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாகுபலி படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் அடுத்து  வரவிருக்கும் படம் "RRR". இந்த RRR படம் அடுத்த வருடம் 2022 ஜனவரி 7 ஆம் தேதி லைக்கா புரடக்ஷன்ஸ் மூலம் தமிழகத்தில் வெளியாகிறது. தல அஜித்தின் வலிமை படமும் பொங்கலுக்கு வெளியாவது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரபாஸின் ராதேஷ்யாம், பவன் கல்யானின் பீம்லா நாயக் படங்களும் பொங்கல் மஹா சங்கராந்திக்கு வருகின்றன.

Rajamouli RRR movie censored and get U/A CBFC certificate

அக்டோபரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்த படத்தின் வெளியீடு, சில காரணங்களால் தள்ளிப்போனது. இதில் ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி இந்த படம் உருவாகிறது. ராஜ மௌலியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் ISC ஒளிப்பதிவு செய்கிறார், இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கிறார்.எடிட்டிங் பணிகளை ஸ்ரீகர் பிரசாத் கையாள்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை சாபுசிரில் கையாள்கிறார்.

Rajamouli RRR movie censored and get U/A CBFC certificate

இந்த படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. Lyca Productions சார்பில் திரு. சுபாஸ்கரன் அல்லிராஜா & DVV Entertainment சார்பில் திரு. தானய்யா இணைந்து வழங்கும் திரைப்படம் RRR தமிழில் இரத்தம் ரணம் ரௌத்திரம் என்ற பெயரில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  RRR திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில் இந்த படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களின் மேற்பார்வையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இந்த படத்தை பார்க்கலாம். 185 நிமிடங்கள் இந்த படம் ஓடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சரியாக 3 மணி நேரம் 5 நிமிடங்கள் RRR படத்தின் நீளம்.

Rajamouli RRR movie censored and get U/A CBFC certificate

தொடர்புடைய இணைப்புகள்

Rajamouli RRR movie censored and get U/A CBFC certificate

People looking for online information on Alia Bhatt, ராஜமௌலி, ராம் சரண், JrNTR, Lyca, Rajamouli, Ramcharan, RRR, RRR Running Time will find this news story useful.