முதல் 3டி பேய் படத்தின் திகிலான மேக்கிங் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘பேரன்பு’ திரைப்படத்தை தொடர்ந்து அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ளவ் ‘லிசா’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. 

Actress Anjali's first 3D horror film Lisa making video has been released

பிஜி முத்தையா தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ராஜு விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லிசா’ திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் சாம் ஜோஸ் நாயகனாக அறிமுகமாகிறார். மேலும், மைம் கோபி, யோகி பாபு உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படம் உருவான விதம் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. இப்படம் குறித்து இயக்குநர் ராஜு கூறுகையில், தமிழ் தெரிந்த நடிகை இந்த கதாபாத்திரத்திற்கு செட்டாவர்கள் என்பதால் அஞ்சலியை அனுகினோம். இந்த படத்தில் வரும் யோகிபாபுவின் காமெடி டிராக் அட்டகாசமாக அமைந்திருக்கிறது. அதேபோல் பிரபல கமெடி நடிகர் பிரம்மானந்தம், பெரிய வசனத்தை அசால்ட்டாக ஒரே டேக்கில் ஓகே செய்து செட்டில் இருந்தவர்களை அதிர வைத்தார்.

இந்த படத்தில் நிறைய லைவ்  சவுண்ட் பயன்படுத்தியிருக்கிறோம். கிராபிக்ஸ் பணிகள் காரணமாகவே தாமதம் ஏற்பட்டது. ரஜினிகாந்த் நடித்த ‘2.o’ படத்திற்கு கிராபிக்ஸ் பணிகள் செய்த ஐ பிக்சல் நிறுவனம் தான் இந்த படத்திற்கும் கிராபிக்ஸ் செய்துள்ளனர். இது வெறும் ஹாரர் படம் மட்டுமல்ல நிறைய எமோஷன்கள் உள்ளன என கூறியுள்ளார்.

‘லிசா’ திரைப்படம் மட்டுமல்லாமல், விஜய் சேதுபதியுடன் ‘சிந்துபாத்’, சசிக்குமாருடன் ‘நாடோடிகள்’ ஆகிய திரைப்படங்களில் நடிகை அஞ்சலி நடித்து வருகிறார்.

முதல் 3டி பேய் படத்தின் திகிலான மேக்கிங் வீடியோ வீடியோ