www.garudabazaar.com

அதிர்ச்சி!! பழம்பெரும் இயக்குநர், வசனகர்த்தா மரணம்! முதல்வர் மற்றும் உதயநிதி நேரில் அஞ்சலி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

முத்தமிழறிஞர் கலைஞர் முரசொலியின் எழுத்தாளர்களில் ஒருவரானவரும் பிரபல இயக்குநருமான சொர்ணம்  காலமானார். இவரது மறைவுக்கு நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின் மற்றும் நடிகர் உதயநிதி அஞ்சலி செலுத்தியதுடன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

director Sornam dies udhayanithi and CM Stalin pays last respect

ஆரம்ப காலத்தில் முரசொலியில் துணையாசிரியராக இருந்து ‘பிறை வானம்’ தொடரை எழுதிய இவர் ‘விடைகொடு தாயே’ என்கிற சமுதாய சீர்திருத்தக் கருத்துகள் அடங்கிய  புரட்சி நாடகத்தின் மூலம் கழக கொள்கைகளைப் தொண்டர்களிடம் கொண்டு சென்றவர்.

director Sornam dies udhayanithi and CM Stalin pays last respect

மேலும் எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் 17 படங்களுக்கு உரையாடல்களை எழுதிய இவர், முத்தமிழறிஞர் கலைஞர் எழுத்தில் ஸ்டாலின் நடித்து உருவான‘ஒரே ரத்தம்’ திரைப்படம் உட்பட பல படங்களை இயக்கியவர். முதல்வர் ஸ்டாலின் நடத்திவந்த இளைய சூரியன்  வார ஏட்டின் பொறுப்பாசிரியராகவும் சொர்ணம் பணியாற்றியதுடன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளராகவும், தமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக் கல்லூரியின் தலைவராகவும், தமிழ்நாடு திரைப்படப் பிரிவுத் தலைவராகவும் இருந்துள்ளார்.

director Sornam dies udhayanithi and CM Stalin pays last respect

இந்நிலையில் இதுபற்றி பேசிய உதயநிதி ஸ்டாலின், தமது ட்விட்டரில், “முத்தமிழறிஞருடன் முரசொலியிலும், கழக தலைவர் அவர்கள் நடத்திய இளையசூரியன் ஏட்டிலும் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்; திரைப்பட இயக்குனர் - வசன கர்த்தா - அரசியல் என இயங்கிய சொர்ணம் மாமா அவர்களின் மறைவையடுத்து அவரது உடலுக்கு இன்று மரியாதை செய்தோம். குடும்பத்தாருக்கு ஆறுதல்-ஆழ்ந்த இரங்கல்!” என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், தமிழக முதல்வர் ஸ்டாலின் தமது இரங்கல் குறிப்பில், மேற்கண்ட சொர்ணம் பற்றிய குறிப்புகளை கூறி, இயக்குநர் சொர்ணம் மறைவுக்கு திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்தார். அதில், “திரைப்பட இயக்குநர், கதாசிரியர் சொர்ணம் மறைவால் அதிர்ச்சி, வேதனை அடைந்தேன். முரசொலி உருவாக்கிய ஆற்றல்மிகு எழுத்தாளர்களில் ஒருவர் சொர்ணம்!” என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: "அரசியலுக்கு அப்பாற்பட்டு"... உதயநிதியை வாழ்த்திய கஸ்தூரி.. ஏன் தெரியுமா? அசத்தல் ட்வீட்!

தொடர்புடைய இணைப்புகள்

director Sornam dies udhayanithi and CM Stalin pays last respect

People looking for online information on CM, Director, MKStalin, RIPSornam, UdhayanithiStalin will find this news story useful.