அட கடவுளே! 'தொரட்டி' படத்தில் நடித்த 'இளம்' கதாநாயகன் 'மரணம்'! அதிர்ச்சியில் 'திரையுலகம்'!
முகப்பு > சினிமா செய்திகள்தொரட்டி படநாயகனும் தயாரிப்பாளருமான ஷமன் மித்ரு கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.
இந்தியாவில் தீவிரமான கொரோனா தொற்று இரண்டாம் அலையானது தற்போது குறையத் தொடங்கினாலும், பல உயிர்களை பலி வாங்கவும் தவறவில்லை. இதில் நிறைய திரைப் பிரபலங்களும் மறைந்திருக்கிறார்கள்.
முன்னதாக பிரபல பாடகர் எஸ்பிபி உயிரிழந்தது பெரும் இழப்பாக திரைத்துறைக்கு அது இருந்தது. பின்னர் நகைச்சுவை நடிகர் விவேக், நடிகர் மாறன், கஜினி பட தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர், சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ், சின்னத்திரை நடிகர் வெங்கட், நடிகர் நெல்லை சிவா, நடிகர் வெங்கட் சுபா, நடிகர் பாண்டு என பலரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
திரை இயக்குநர்களை பொருத்தவரை இயக்குநர் எஸ்பி ஜனநாதன், இயக்குநர் கே.வி.ஆனந்த், இயக்குநர் தாமிரா உள்ளிட்டோர் கொரோனா மற்றும் வேறு உடல் நலக்குறைவு காரணங்களால் உயிரிழந்தனர். இதேபோல் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழந்தார். அதன் பின்னர் புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, காலா, அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் அண்மையில் மரணம் அடைந்தார்.
இந்நிலையில் 2019-ஆம் ஆண்டு வெளியான தொரட்டி படத்தில் ஹீரோவாக நடித்து பாராட்டுகளையும் பெற்ற ஷமன் மித்ரு, கடந்த ஒரு மாத காலமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை குரோம்பேட்டையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.