www.garudabazaar.com

Beast: 60S Kidsக்கு ‘Jalilo Jimkana’... 90S, 2K Kidsக்கு ‘Jolly O Gymkhana’.. fans வெறித்தனம்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பீஸ்ட் படத்தின் 2வது சிங்கிள் பாடலான, ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடலை கேட்கும் ஆர்வத்துடன், ‘ஜாலிலோ ஜிம்கானா’ எனும் பழைய பாடலையும் ரசிகர்கள் முனுமுனுத்து வருகின்றனர்.

Vijay Beast Jalilo gymkhana 60S Kids Jalilo Jimkana

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகையர் திலகம் சாவித்ரி, நாட்டிய பேரொளி பத்மினி ஆகியோர் இணைந்து நடித்து 1956-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அமர தீபம்.

அப்போது மிகவும் ஹிட் படமாக அமைந்த இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற புகழ்பெற்ற பாடல் தான் ஜாலிலோ ஜிம்கானா. டி. சலபதி ராவ் மற்றும் டி.ராமநாதன் இசையமைத்த இந்த பாடலை பாடகர் ஜிக்கி பாடியிருந்தார். தஞ்சை என்.ராமையா தாஸ் எழுதிய இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் ஆனது.

Vijay Beast Jalilo gymkhana 60S Kids Jalilo Jimkana

“ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ கும்க்கானா.. ஹேய் ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ கும்க்கானா” என்று அந்த கால குத்துப் பாடலாக வெளியான இந்த பாடல் கேட்கும்போதே துள்ளலாக ஆடவைக்கும். இது தான் 60S Kids-ன் ஜாலிலோ ஜிம்கானா.

இந்நிலையில் தான் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள பீஸ்ட் படத்தின் 2வது சிங்கிளான ஜாலியோ ஜிம்கானா பாடல் வெளியீடு பலரிடையே பெரும் உற்சாகத்தை தந்துள்ளது. கு.கார்த்திக் எழுதியுள்ள இந்த பாடலை தளபதி விஜய் சொந்த குரலில் பாடல், இதுவரை பாடல் புரோமோஷனில் மட்டுமே இடம் பெற்றுவந்த இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இப்போது இந்த பாடலில் இடம் பெறுகிறார்.

Vijay Beast Jalilo gymkhana 60S Kids Jalilo Jimkana

இவர்களுடன் இந்த பாடலுக்கு இசையமத்த இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரும் இடம் பெறுகிறார். இந்த பாடலின் குட்டி ப்ரோமோவுக்கு ரசிகர்கள் குஷியாகிவிட்டனர். செம ட்ரெண்டிங்காக மாறும் இந்த பாடலுக்கு முன்னர், பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல் சிவகார்த்திகேயன் வரிகளில் வெளியாகி ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

Vijay Beast Jalilo gymkhana 60S Kids Jalilo Jimkana

இதனிடையே ரசிகர்கள் 60S Kids-க்கு ஜாலிலோ ஜிம்கானா.. என்றால் 90ஸ் மற்றும் 2கே கிட்ஸ்க்கு  ஜாலியோ ஜிம்கானா என ஜாலியாக பகிர்ந்து வருகின்றனர். #ஜாலியா_இருங்க_நண்பா

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Beast Jalilo gymkhana 60S Kids Jalilo Jimkana

People looking for online information on Anirudh, Beast, Beast Second Single, Jalilo gymkhana, Jalilo Jimkana, Nelson, Thalapathy Vijay will find this news story useful.