www.garudabazaar.com

மீண்டும் சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்த புகழ்… களைகட்டிய குக் வித் கோமாளி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் இந்த வார நிகழ்ச்சியில் மீண்டும் புகழ் கலந்துகொண்டுள்ளார்.

Actor pugazh surprise re entry in Cook with comali 3

குக் வித் கோமாளி

விஜய் தொலைக்காட்சியில் தொடர்ந்து மூன்று சீசன்களாக வெற்றிநடை போட்டு வரும் நகைச்சுவை ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளி. அதிலும் சீசன் 2 மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த சீசனின் அஷ்வின், சிவாங்கி மற்றும் புகழ் ஆகிய மூவருக்கும் ஏராளமான ரசிகர்கள் சமூகவலைதளங்களில் உருவாகி அவர்களின் நகைச்சுவைக் காட்சிகள் அதிகளவில் பகிரப்பட்டன.

Actor pugazh surprise re entry in Cook with comali 3

சினிமாவில் கால்பதித்த மூவர்

அந்த மூவரில் அஷ்வின் என்ன சொல்ல போகிறாய் திரைப்படம் மூலம் திரைத்துறையில் ஹீரோவாகிவிட்டார். சிவாங்கியும் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் மூலமாக அறிமுகமாகிறார். அதுபோலவே புகழ் ஏற்கனவே பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். உச்ச நட்சத்திரங்களான அஜித் மற்றும் சூர்யா ஆகியோரோரு நடித்த வலிமை  மற்றும் எதற்கும் துணிந்தவன் படங்கள் கடந்த அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. இந்த படங்களில் அவரது கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. இதையடுத்து புகழ்  விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள பெரிய நட்சத்திரங்களின் படங்களான யானை, டான் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார்.

மீண்டும் குக்  வித் கோமாளி

இதற்கிடையில் குக் வித் கோமாளி சீசன் 3 தொடங்கியுள்ளது. இந்த சீசனில் அவர் முதலில் போட்டியாளராகக் கலந்துகொள்ளவில்லை. அதனால் ரசிகர்கள் பலரும் அவரை மிஸ் பண்ணுவதாக பேசப்பட்ட நிலையில் சர்ப்ரைஸாக தோன்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் அவ்வப்போது வருகை தருவேன் என்றும் அவர் உறுதியளித்து இருந்தார்.

Actor pugazh surprise re entry in Cook with comali 3

மீண்டும் சர்ப்ரைஸ் கொடுத்த புகழ்

அதன் படி இப்போது மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டுள்ளார். அதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகழ் வழக்கம்போல தனது குறும்புகளை வெளிப்படுத்தி மற்ற போட்டியாளர்களை சிரிக்க வைக்கிறார். ப்ரோமோவில் முக்கிய அம்சமாக சார்பட்டா பரம்பரை புகழ் நடிகர் சந்தோஷ் புகழை தூக்கும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. மேலும் புகழைக் கலாய்க்கும் விதமாக அவர் ‘இன்னிக்கு உன் புகழ் எல்லாம் காலியாக போகுது’ என சொல்வதும், புகழ் அல்லு அர்ஜுன் போல புஷ்பா அடங்காதவன் ஸ்டைல் செய்யும் காட்சிகளும் கவனத்தை ஈர்த்துள்ளன.

தொடர்புடைய இணைப்புகள்

Actor pugazh surprise re entry in Cook with comali 3

People looking for online information on CWC, Pugazh, Vijay tv will find this news story useful.