www.garudabazaar.com

'ரித்தியை பிக்பாஸ் வீட்டுக்கு கூட்டிட்டு போகல ஏன்னா'... ரியோவின் மனைவி வெளியிட்ட பதிவு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று 86வது நாளை கடந்து வெற்றிகரமாக இறுதிப் பயணத்தை போட்டியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் ஒவ்வொரு சீசனிலும் இறுதியாக நடைபெறும் Freeze டாஸ்க்கிற்காக ரசிகர்கள் காத்திருப்பது வழக்கம். அந்த வகையில் இன்று இந்த சீசனுக்கான Freeze டாஸ்க்  துவங்குகிறது. முதல் ஆளாக ஷிவானியின் தாயார் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரியோவின் குடும்பம் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருகின்றனர். முதலில் அவரது மனைவி நுழைய காதலே காதலே என்ற பாடல் ஒலிக்க இருவரும் எமோஷனலாக கண் கலங்குவதை காணமுடிகிறது.

rio wife emotional note on freeze task ரியோவின் மனைவி வெளியிட்ட பதிவு

இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு தருணம் ரியோ தனது குழந்தையை பார்க்க போகும் அந்தத் தருணம்தான். காரணம் கடந்த சீசனிலும் சாண்டி தனது மகளை சந்தித்த அந்த தருணம் இன்றும் பலரது பேவரைட்டாக உள்ளது. ஆனால் இன்று வெளியான புரோமோவில் அவரது மனைவி ஷ்ருதி மட்டும் தான் வீட்டிற்குள்ளே வருகிறார். இதுபற்றி அவர் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார். அவர் கூறும்போது "பலரும் என்னிடம் ரித்தியை ஏன் அழைத்துக் கொண்டு வரவில்லை என்று கேட்கின்றனர். உண்மை இதுதான் கொரோனா வைரஸ் பாதுகாப்பு விதிகளின் படி ஒரு வயதுக்குட்பட்ட குழந்தையை உள்ளே செல்ல அனுமதி இல்லை" என்று கூறியுள்ளார்.

'ரித்தியை பிக்பாஸ் வீட்டுக்கு கூட்டிட்டு போகல ஏன்னா'... ரியோவின் மனைவி வெளியிட்ட பதிவு..! வீடியோ

Tags : Rio

தொடர்புடைய இணைப்புகள்

rio wife emotional note on freeze task ரியோவின் மனைவி வெளியிட்ட பதிவு

People looking for online information on Rio will find this news story useful.