#BREAKING : ரெஜினா இப்போ ராவணனுக்கு சிஸ்டர் - படத்தின் டைட்டிலே கதை சொல்கிறதே.!!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை ரெஜினா நடித்து வரும் படத்தின் தலைப்பு குறித்து தகவல் தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வருபவர் ரெஜினா. இவர் நடித்த கேடிபில்லா கிள்ளாடி ரங்கா, மாநகரம் உள்ளிட்ட படங்கள் இவருக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தன. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் ரெஜினா பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் ரெஜினாவின் அடுத்தப்பட தலைப்பு குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. இத்திரைப்படத்துக்கு 'சூர்ப்பணகை' என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கார்த்திக் ராஜு இத்திரைப்படத்தை இயக்குகிறார். ராமாயணத்தில் வரும் ராவணனின் தங்கையின் பெயர் சூர்ப்பணகை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags : Regina Cassandra, Soorpanagai, Carthik raju