Breaking: பெண்களை மையப்படுத்தி உருவாகும் பிரபல இயக்குநர் படத்தில் ரெஜினா
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 31, 2019 11:45 AM
தமிழில் தினேஷ் நடித்த 'திருடன் போலீஸ்', 'உள்குத்து' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கார்த்திக் ராஜூ. இதனையடுத்து அவர் இயக்கத்தில் உருவான படம் 'கண்ணாடி'. இந்த படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்திருந்தார்.

இந்த படம் தெலுங்கில் 'நினு வீடனி நீடனு நேனே' என்ற பெயரில் கடந்த ஜூலை 12 ஆம் தேதி வெளியாகியிருந்தது. இந்த படத்தை வெங்கடதாரி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க, எஸ்.தமன் இசையமைத்திருந்தார்.
இதனையடுத்து இயக்குநர் கார்த்திக் ராஜூ, ரெஜினா கஸண்ட்ரா முதன்மை வேடத்தில் நடிக்கும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். பெண்களை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தை Apple Trees Studios சார்பாக ராஜ் சேகர் வர்மா தயாரிக்கவுள்ளார். படப்பிடிப்பு ஜனவரி 31 ஆம் தேதி முதல் குற்றாலத்தில் துவங்கப்படவுள்ளது. இந்த படம் தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ளது.
இந்த படம் குறித்து தயாரிப்பாளர் ராஜ் சேகர் வர்மா தெரிவித்ததாவது, ''ஒரு தயாரிப்பாளராக இல்லாமல் பார்வையாளனாகவே இயக்குநர் கார்த்திக் ராஜு சொன்ன கதை, என்னை மிகவும் ஈர்த்தது. எவரும் கேள்விப்பட்டிராத தளத்தில் வித்தியாசமான பாணியில் பல இடங்களில் ஆச்சர்யப்படுத்தும் விதமாக அவரது கதை இருந்தது.
Apple Tree studios முதல் தயாரிப்பாக பெண் கதாப்பாத்திரத்தை மையமாக கொண்ட திரில்லர் படத்தை தயாரிப்பது பெரும் மகிழ்ச்சி. கார்த்திக் ராஜு கதை சொன்ன போதே இந்த கதாப்பாத்திரத்திற்கு ரெஜினா கஸண்ட்ரா சரியாக இருப்பார் என நினைத்தேன். அவரும் கதை பிடித்து ஆவலுடன் நடிக்க ஒப்புக்கொண்டார். இந்த கதாப்பாத்திரத்தில் ரசிகர்கள் அவரை பெரிதும் ரசிப்பார்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.