''நாடகக் காதல்.. ஆணவக் கொலை - விரைவில் நடுநிலையான ஒரு சினிமா'' - ஜிவி.பிரகாஷ் இயக்குநர் அதிரடி!
முகப்பு > சினிமா செய்திகள்ஜிவி.பிரகாஷை வைத்து அடங்காதே படம் இயக்கிய சண்முகம் முத்துசாமி தனது அடுத்த படம் குறித்து அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார்.

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான திரைப்படம் அடங்காதே. இத்திரைப்படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் சுரபி, மந்த்ரா பேடி, சரத்குமார், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஶ்ரீக்ரீன் ப்ரொடக்ஷன் இப்படத்தை தயாரித்துள்ளது. முழு வேலைகளும் முடிந்த நிலையில், அடங்காதே திரைப்படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது.
இந்த நிலையில் அடங்காதே படத்தின் இயக்குநர் சண்முகம் முத்துசாமி அடுத்த படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், 'வேற வழியில்லை. வெகு விரைவில் 'நாடக காதல்' என்ற வார்த்தை... ஏன் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் ஆணவ கொலைகள் பற்றிய நடுநிலையான பார்வையோடு ஒரு சினிமா எடுக்கப்படும்' என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தின் எழுத்து பணி நடந்து கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
My Next as ✍️....
Details soon 🤞🤞@itisprashanth @LMKMovieManiac @rameshlaus @sri50 @pudiharicharan @kayaldevaraj @esakkimuthuk @meenakshicinema @cinemapayyan @sathishmsk @onlynikil pic.twitter.com/QW3Of1wvJY
— 🆂🅷🅰🅽🅼🆄🅶🅰🅼 🅼🆄🆃🅷🆄🆂🅰🅼🆈 (@shan_dir) March 2, 2020