#BREAKING : அருண்விஜய் Next - மீண்டும் அதே ஹிட் காம்போ... டைட்டில், ஹீரோயின், ஷூட் ப்ளான் இதுதான்.
முகப்பு > சினிமா செய்திகள்அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய முக்கியமான தகவல் தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போது தனது படங்களால் கலக்கி வருபவர் அருண்விஜய். இவர் நடித்த என்னை அறிந்தால் படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. இதையடுத்து அருண்விஜய் நடிப்பில் உருவான குற்றம்-23, தடம், மாஃபியா உள்ளிட்ட படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது இவர் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் சினம் படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அருண்விஜய்யின் 31-வது படம் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. குற்றம் 23 படத்தை இயக்கிய அறிவழகனுடன் இவர் மீண்டும் கை கோர்க்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்துக்கு ஜிந்தாபாத் என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் நம்பத் தகுந்த கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனன். இத்திரைப்படத்தில் ரெஜினா கதாநாயகியாக நடிப்பதாகவும், டெல்லியில் முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.