நடிகை சமந்தா கர்ப்பமா..? சோஷியல் மீடியாவில் இன்னைக்கு இதுதான் 'பேச்சு'... உண்மை என்ன.?
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை சமந்தா குறித்து தற்போது உலவி வரும் செய்தி பற்றிய முக்கியமான தகவல் தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் சமந்தா. விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கிய இவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பிசியாக நடித்து வருகிறார். அண்மையில் தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான 'ஜானு' திரைப்படமும் ரசிகர்களை கவர்ந்தது. இது தமிழில் வெளியான 96 படத்தின் ரீமேக் ஆகும். தமிழில் இயக்கிய ப்ரேம்குமாரே இதை தெலுங்கிலும் இயக்கினார்.
இந்நிலையில் சமந்தா தற்போது கர்ப்பம் ஆகி இருப்பதாகவும், அவர் நடிக்கவிருந்த படங்களில் இருந்து விலகுவதாகவும் ஒரு செய்தி கிளம்பியது. இதையடுத்து நாம் அவரின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்த போது, இது முற்றிலும் பொய், அர்த்தமற்ற வதந்தி என திட்டவட்டமாக மறுத்துவிட்டார்கள்.
மேலும் சமந்தா தற்போது புதியதாக கமிட் ஆகியுள்ள படங்களிலும், ரிலீஸ் ஆகவிருக்கும் அவரது புதிய வெப் தொடரில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சமந்தாவோ, அவரது கணவர் நாக சைத்தன்யாவிடம் இருந்தோ எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.