Pattamboochi

TNPL ஆடும் பிரபல இயக்குனர் மகன்.. அப்போ, விஜய் பட Title-க்கு இதான் காரணமா??.. சுவாரஸ்ய தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியாவில் ஐபிஎல் தொடர்கள் நடைபெறுவது போலவே, தமிழ்நாடு  வீர்ரகளை வைத்து, TNPL என்னும் டி 20 லீக் தொடரும் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது.

Reason behind vijay and gvm yohan adhyayam ondru movie title

இதன் நடப்பு ஆண்டுத் தொடர், சமீபத்தில் ஆரம்பமாகி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பிரபல இயக்குனர் ஒருவரின் மகனும் TNPL தொடரில் ஆடி வரும் தகவல், சினிமா மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

கிரிக்கெட்டில் பிரபல இயக்குனரின் மகன்

பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ் அணி, இதுவரை இரண்டு போட்டிகளில் ஆடி, இரண்டிலுமே வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. இதில், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்றிருந்த போட்டியில், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெல்லை ராயல்ஸ் அணி அபார வெற்றியை பெற்றிருந்தது.

முதல் பந்திலேயே விக்கெட்

இந்த போட்டியில், சேலம் அணி முதலில் பேட்டிங் செய்த போது, அந்த அணியின் முதல் விக்கெட்டை 19 வயதான ஆர்யா யோஹன் மேனன் எடுத்திருந்தார். நெல்லை அணியில், வலைப்பந்து வீச்சாளராக உள்ளே வந்து, பின்னர் தனது திறமையால் அணியில் இடம்பிடித்த ஆர்யா யோஹன், தனது முதல் பந்திலேயே விக்கெட் எடுத்தும் அசத்தி உள்ளார்.

ஓஹோ, இதான் காரணமா??

இந்த இளம் வீரரான ஆர்யா யோஹன், மின்னலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட ஏராளமான ஹிட் படங்களை இயக்கிய கவுதம் வாசுதேவ் மேனனின் மகன் தான். கமல், அஜித், சூர்யா உள்ளிட்ட பல பிரபல நடிகர்களை வைத்து படங்கள் இயக்கி உள்ள கவுதம், விஜய்யை வைத்து யோஹன் அத்தியாயம் ஒன்று என்னும் திரைப்படத்தை இயக்குவதாக இருந்தது.

இது தொடர்பான போஸ்டர்கள் கூட இணையத்தில் அதிகம் வைரலாகி இருந்தது. ஜேம்ஸ் பாண்ட் போல ஒரு சர்வதேச Spy கேரக்டரில் விஜய் நடிப்பதாக கவுதம் வாசுதேவ் மேனன் அறிவித்திருந்த நிலையில், சில காரணங்களால் இந்த படம் கை விடப்பட்டது. இதனிடையே, தற்போது கவுதமின் மகன் பெயர் யோஹன் என் தெரிய வந்துள்ள நிலையில், இதற்காக தான் விஐய் படத்திற்கும் யோஹன் என கவுதம் பெயர் வைத்திருக்கலாம் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Reason behind vijay and gvm yohan adhyayam ondru movie title

People looking for online information on Arya Yohan Menon, Gautham Vasudev Menon, TNPL, Vijay, Yohan Adhyayam Ondru will find this news story useful.