www.garudabazaar.com

“ஓ.. இதான் விஷயமா..?”.. நிரூப்பை ‘நாமினேட்’ செய்த ஹவுஸ்மேட்ஸ் பலரும் சொன்ன ஒரே காரணம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து 2 பேரை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற நாமினேட் செய்யப்பட வேண்டும் என்கிற டாஸ்க் கொடுக்கப்பட்டது. மேலும், “எல்லாரும் நல்லவர்கள் என சொல்லி நீங்கள் நல்லவர்கள் வேஷம் போட வேண்டாம்” என்று பிக்பாஸ் முன்பே தெரிவித்திருந்தார்.

reason behind housemates nominates niroop eviction biggbosstamil5

அதன்படி மதுமிதா, சுருதி, ஐக்கி, நாடியா பாவனி ஆகியோர் நிரூப்பை நாமினேட் செய்ததுடன் அவர் ஒரு வலிமையான போட்டியாளராக இருக்கிறார் என்றும், அவர் இருந்தால் அவர் ஜெயித்து விடுவார் அல்லது தாங்கள் ஜெயிக்க முடியாது என்கிற காரணங்களை நேரடியாக கூறியிருக்கின்றனர்.

நிரூப்பை பொருத்தவரை அபினவ் மற்றும் வருண் இருவரையும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு நாமினேட் செய்திருக்கிறார். கடைசியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்த பலூன் உடைத்தல் போட்டியில் அபினவ் மற்றும் வருண் இருவரும் ரூல் புக்கில் இருக்கும் ரூல்ஸை மீறி நடந்து விட்டு, ரூல்ஸில் அப்படி எதுவும் இல்லை என்று ஆவேசமாக பேசியதும் வாக்குவாதம் பண்ணியதும் தான் காரணம் என்று நேரடியாக குறிப்பிட்டு இவர்கள் இருவரையும் நாமினேட் செய்திருக்கிறார் நிரூப்.

தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்க போகிறவர்கள் யார் என்பதை ஹவுஸ் மேட்ஸின் செயல்களும், வெளியிலிருந்து பார்க்கும் மக்களின் வாக்குகளும் தீர்மானிக்கலாம். ஆம், இனி பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் ஹவுஸ் மேட்ஸ்க்கு வெளியில் இருந்து மக்கள் வாக்கு பதிவு செய்யலாம் என்கிற முறை தொடங்கப்பட்டிருக்கிறது.

அதன்படி குறிப்பிட்ட ஹவுஸ் மேட் வெளியேறாமல் இருக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு பார்வையாளர்கள் வாக்களிக்கலாம் என்பதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

reason behind housemates nominates niroop eviction biggbosstamil5

People looking for online information on BiggBossTamil5, Eviction, Housemates, Nominates niroop will find this news story useful.