"கடைசியா ஊட்டுன சோத்துப்பருக்கைய வெச்சுதான் ராஜகண்ணுனு தெரிஞ்சுது!"- நிஜ செங்கேணி பேட்டி! Video
முகப்பு > சினிமா செய்திகள்அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம்.
ஜோதிகா & சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், சூர்யா, பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை த.செ.ஞானவேல் எழுதி, இயக்கியுள்ளார். தமிழகத்தில் 1990களில் பழங்குடி இருளர் இன மக்களின் மீது காவல் துறையினரால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறலுக்காக வழக்கறிஞர் சந்துரு (சூர்யா, பிரபல நீதியரசர் சந்துருவாக) நடத்தும் சட்டவழி அறப்போராட்டமே ஜெய் பீம்.
இப்படத்தில் இருளர் இன தம்பதியரான ராஜாக்கண்ணு மற்றும் செங்கேணி வாழ்ந்து வருவார்கள். இதில் ராஜாகண்ணுவை திருட்டு பொய் கேஸ் வழக்கில் பிடித்துச் சென்று, கஸ்டடியல் டார்ச்சர் செய்யும் போலீஸார் ஒரு கட்டத்தில், காவல் நிலையத்திலேயே இறந்து போன ராஜாக்கண்ணுவின் மரணத்தை மறைத்து அவர் தப்பியோடிவிட்டதாக கூறி சுற்றலில் விட்டார்கள்.
இதில் ராஜாக்கண்ணுவான மணிகண்டனும், செங்கேணியாக நடிகை லிஜோ மோல் ஜோஸூம் நடித்திருப்பார்கள். இருவருமே போலீஸாரின் கஸ்டடியல் டார்ச்சருக்கு ஆளாவது போல் தங்களது அழுத்தமான நடிப்பை உடல், மொழி, உணர்ச்சி என எல்லா விதத்திலும் கொடுத்திருக்கிறார்.
முன்னதாக பிஹைண்ட்வுட்ஸ்க்கு பிரத்தியேக பேட்டி அளித்திருந்த நடிகர் மணிகண்டன், தமது பேட்டியில், “ஒரிஜினல் ராஜாக்கண்ணுவுக்கு என்ன நடந்தது என்று நீங்கள் கேட்டீர்கள் என்றால் அது ரொம்ப கொடூரம். அதில் ஒரு பத்து சதவீதத்தையாவது திரையில் கொண்டு வரவேண்டும் என முயற்சித்தோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதேபோல் ராஜாக்கண்ணுவின் அக்கா பச்சையம்மாவாக நடித்திருந்த நடிகை சுபத்ரா, “ஜெய் பீம் படத்தில் நான் நடிக்கும் ஒரு காட்சியில் புடவையுடன் இருக்கும் என்னை போலீசார் அடித்து இழுத்துச் செல்வார்கள். பிறகு ஒரு ஜம்ப் இருக்கும். அப்படியே போலீஸ் ஸ்டேஷனில் பார்த்தால் புடவை இன்றி பாதி ஆடையில் இருப்பேன். ஆனால் நிஜமான ராஜாக்கண்ணுவின் அக்கா நிர்வாணமாக நிற்க வைக்கப்பட்டதாக கதை சொல்லும் போது என்னிடம் குறிப்பிட்டார்கள்.” என்று பிஹைண்ட்வுட்ஸ்க்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் லிஜோ மோல் ஜோஸ் நடித்த செங்கேணி கதாபாத்திரத்திற்கு உரிய நிஜ செங்கேணியான பார்வதி Behindwoods O2 சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், “பிரசிடெண்ட் வீட்டுக்கு அறுப்பு அறுக்க சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த பின்பு இரவு 10 மணிக்கு வந்த போலீஸார், வீட்டிலேயே வைத்து பசங்களை அடித்து, அனைத்தையும் நாசம் பண்ணி, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்ல, மோப்ப நாயை எங்கள் மேலே விட்டார்கள். நாய் எங்களை சீண்டவே இல்லை. அப்பவே பிரசிடெண்ட் (ஊர் தலைவர்) நாங்கள் திருட மாட்டோம் என்று சொன்னார்.
ஆனாலும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று போட்டு செம்ம அடி அடித்தார்கள். எனக்கு இரண்டு கையும் வீங்கிவிட்டது. பின்னர் கேள்விப்பட்டு என் வீட்டுக்காரர் வந்து சப்-இன்ஸ்பெக்டர் காலில் விழுந்து கும்பிட்டு சார் நாங்க எதுவுமே செய்யவில்லை என்று சார் என்று கூற, சப்-இன்ஸ்பெக்டர் என் கணவரை காலால் எட்டி உதைத்தார்.
மீண்டும் இழுத்துச் சென்று உள்ளாரே வைத்து அடி அடி என்று அடிக்க சுவர் முழுக்க ரத்தம் பீச்சியடித்தது. பிறகு சப் இன்ஸ்பெக்டர் வந்து என்னிடம் சொல்லும் பொழுது கருவாட்டு குழம்பு வைத்து சோறு ஆக்கி எடுத்துக்கொண்டு காலையில் வா என்று கூறினார். நானும் விட்டுவிடுவார்கள் என்று நினைத்துக் கொண்டுதான் நான் போறேன் அடுத்த நாள் சென்றால், என் கணவரை நிஜத்தில் ஜன்னலில் வைத்து கட்டி பிறந்த மேனிக்கு ஆடையின்றி அடித்தார்கள். ரத்தம் சுவர் முழுக்க ஊற்றியது.
பின்னர், திருடிய 1 லட்சம் பணத்தையும் நகையையும் கொண்டு வந்து கொடுத்துவிடு என்று சொன்னார்கள். நாங்கள் எல்லாம் அப்படி எடுக்க மாட்டோம் சார் என்று எவ்வளவோ கூறினோம். இருந்தாலும் என்னையும் அடித்து, சிண்டு முடியை பிடித்து இழுத்துக்கொண்டு வந்து வராண்டாவில் போட்டார்கள். பின்னர் செருப்பு காலுடன் போட்டு கணவரையும், என் நாத்தனார் மகனையும் மிதித்தார்கள். நான் சாப்பாடு கொடுத்தேன். சாப்பாடு சாப்பிட கூடிய அளவில் கூட அவர்களுக்கு சுய நினைவு இல்லை. சோறும் திங்கவில்லை மீண்டும். அவரை முடியை பிடித்து, படத்தில் இழுத்துச் செல்வது போல தரதரவென இழுத்துச் சென்றார்கள்.
என் நாத்தனார் மகனையும் கொழுந்தியாள் மகனையும் அடித்து விட்டார்கள். இருவருக்கும் கழுத்து தொங்கி விட்டது. அதன் பிறகு அந்த சப்-இன்ஸ்பெக்டர் குவார்ட்டரை குடித்துவிட்டு (மது அருந்திவிட்டு) மீண்டும் வருகிறார். பின்னர் மிளகாய்த்தூள் வாங்கி வரச்சொல்லி கண்களிலும் மூக்கிலும் கொட்டினார்கள். காரணம் இவர்கள் பாசாங்கு காட்டுகிறார்கள், உண்மையைச் சொல்ல மறுக்கிறார்கள் என்று சொல்லி இப்படி செய்தார்கள். பின்னர் என்னை அடித்து பஸ் ஏற்றி விட்டார்கள். அதைப்பற்றி அவர்கள் அவர்கள் மொழியில் பேசிக் கொண்டார்கள்.
போன நாங்கள் டீக்கடையில் நின்று, டீ கூட குடிக்க முடியவில்லை. பஸ்ஸை விட்டு இறங்கியதும் மயக்கம் போட்டு கீழே விழுந்து விட்டேன். பின்னர் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களின் உதவியுடன் போலீஸ் ஸ்டேஷன் சென்று கேட்டபோது, அவர்கள் ஸ்டேஷனில் இருந்த ரத்தத்தை எல்லாம் கழுவிக் கொண்டிருந்தார்கள். என் கணவர் உள்ளிட்டோர் தப்பி ஓடிவிட்டார்கள் என்றும் கூறினார்கள். வழியில் இன்ஸ்பெக்டரை பார்த்து எங்கள் தரப்பினர் கேட்டபோது கூட அவர் அதையே தான் சொன்னார்.
என் நாத்தனார் மகனின் மூத்த பையனை காது ஜவ்வுகளிலே அடித்து மெண்டல் ஆக்கிவிட்டார்கள். அவனுக்கு இப்போது சுயநினைவை. இல்லை ராஜாகண்ணுவுக்கு கடைசியாக சோறு கொடுக்கும்போது பார்த்ததுதான். கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜாகண்ணுவின் பிரேதம் சாலையில் இருந்ததாக கூறி பிரேதத்தை அங்கிருந்த போலீஸார் கைப்பற்றினார்கள். என் கணவருடைய வாயில் கடைசியாக, நான் சோறு ஊட்டும் போது ஒட்டியிருந்த ஒரு பருக்கை சோற்றை வைத்துதான், அந்த ஃபோட்டோவை பார்த்து அது அவர்தான் என்பதை 1 வருடம் கழித்து கண்டுபிடித்தோம்.
பின்னர் வழக்கு தொடரும்போது, 1 லட்சம் தர்றோம் என்றெல்லாம் பேரம் பேசினார்கள். எங்க ஊர் காரங்க அன்றும் இன்றும் பாதுகாப்பாக இருந்தார்கள். என் கணவர் என்னைவிட 5 வயது குறைந்தவர். வழக்கறிஞர் சந்துரு எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தார். பணம் பெறவில்லை. இப்போது தட்டுக்கூடை உள்ளிட்டவற்றை தயாரித்து பிழைக்கிறோம்!” என்று பல்வேறு விஷயங்களை பார்வதி அம்மாள் குறிப்பிட்டுள்ளார்.
"கடைசியா ஊட்டுன சோத்துப்பருக்கைய வெச்சுதான் ராஜகண்ணுனு தெரிஞ்சுது!"- நிஜ செங்கேணி பேட்டி! VIDEO வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Suriya Jai Bhim Controversy Symbol Removed Mohan G Thanked
- Suriya 2d Ta Se Gnanavel Jaibhim Calendar Controversy
- "I Was Asked To Go With This Mind Set..." - 'Jai Bhim' Actor Bala Haasan Opens Up About His BAD COP Role
- Award Will Be Honored Soori Praises Suriya Jaibhim
- Jai Bhim Suriya Bold Vijay Afraid To Speak Out Says Seeman
- "I Was 4 Months Old In My Mother's Womb And He 7 Months In His Mother's..." Suriya Breaks Down At Puneeth Rajkumar's Memorial
- Suriya Cries In Puneeth Rajkumar Memorial Video
- Sengani's Daughter In Suriya's 'Jai Bhim' Gets TC From Her School? Here Is The Truth
- Tc For Jai Bhim Little Girl Truth Behind The Rumour Exclusive
- H Raja About Jai Bhim, Suriya Subtle Reply Viral On Social Media
- Suriya JaiBhim Actress Subathra Pachaiyammal Exclusive Interview
- Director Thangar Bachchan Appreciates Jai Bhim Movie Cast & Crew
தொடர்புடைய இணைப்புகள்
- "நாய், பூனை செத்தா எங்க வீட்டு பின்னாடி போடுறாங்க, ஒரே நாத்தம்" Real JAI BHIM பட கிராம மக்கள் பேட்டி
- "கூட்டிட்டு போய் கண்ணை குருடாக்கிடுவாங்க" Jai Bhim படத்தை மிஞ்சும் சித்திரவதைகள்- Retd Judge பேட்டி
- SLAP Meme Controversy: "தமிழ் தெரிஞ்சு Hindi-ல பேசினா..."- கோபத்தில் Prakash Raj | Jai Bhim, Suriya
- "Jai Bhim-ஐ விட கொடூரமான சம்பவங்கள்! போலீஸ் விசாரணையில் நடப்பது இதான்" RETD Police Varadharaj பேட்டி
- 'இதுதான் பிரச்சனையா, சரி இப்போ மாத்திட்டோம்'Jai Bhim Calendar Controversy-க்கு முடிவு கட்டும் Suriya
- Jai Bhim-ல Skirt அவிழ்த்த Kiruba Police, "இப்படி அடிச்சேன், Bad Words-ல திட்றாங்க" - Bala Haasan
- "பாம்பு புடிச்சேன்.. இரவு வேட்டைக்கு போவாம்" ஜெய் பீம் சுவாரஸ்யம் பகிர்ந்த செங்கனி
- எனக்கு 4 மாசம், Puneeth-க்கு 7 மாசம்.. இவ்வளவு சீக்கிரம் விட்டு போயிட்டாரு- கண்கலங்கிய Suriya
- அடிமை விலங்கை அறுத்தெறித்த பெண் - முதல்வரே தேடி போய் பாராட்டிய வீர மங்கை அஸ்வினி பேட்டி
- Juice குடுத்து, தொங்க விட்டு அடிச்சாங்க - Mosakutty
- Leadership-னா இப்படித்தான் இருக்கணும்னு செஞ்சு காட்டிடீங்க | Suriya | Jai Bhim
- Raajakannu தான் இறந்த என் அண்ணன் - Mosakutty