“புனித் குழந்தையா இருக்கும்போதுல இருந்து தெரியும்!”.. சமாதியில் நின்று அழுத சூர்யா.. வீடியோ!
முகப்பு > சினிமா செய்திகள்கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவு இந்திய திரையுலகையே சோகத்தை ஏற்படுத்தியது. தொடர்ச்சியாக பல்வேறு திரை பிரபலங்களும், ரசிகர்களும் புனித் ராஜ்குமாரின் மரணத்துக்கு இரங்கலை தெரிவித்து வருகின்றனர். பலரும் அவருடைய கல்லறைக்கு சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பெங்களூரில் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த புனித் ராஜ்குமார், திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனைக்கு தானாகவே நேராக சென்று பரிசோதனைகள் செய்து கொண்டார். ஆனால் அதன்பிறகு அவருடைய நிலை மோசமானது. பின்னர் விக்ரம் என்னும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
46 வயதான புனித் ராஜ்குமாரின் மரணம் பலரையும் உலுக்கியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்பட பிரபலங்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வந்த நிலையில், நடிகர் சூர்யா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் புனித் ராஜ்குமாரின் கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்தி வந்தனர்.
அப்போது செய்தியாளரிடம் பேசிய சூர்யா, “என்னுடைய அம்மா சொல்லி இருந்தார். 4 மாத குழந்தையாக நான் இருந்தேன். அவர் ஏழு மாத குழந்தையாக இருந்தார். அப்போது தான் நானும் அவரும் அறிமுகமாகிக் கொண்டோம். என்னுடைய குடும்பமும் அவருடைய குடும்பம் மிகவும் நெருக்கமானது.
அவருடைய இந்த இழப்பை எங்களால் நம்பமுடியவில்லை. ஏற்க முடியவில்லை. எந்த ஃபோட்டோ, பார்த்தாலும் எந்த வீடியோவை பார்த்தாலும் சிரித்துக் கொண்டே தான் இருப்பார்.
அவருடைய தந்தையாரும் என்னுடைய தந்தையாரும் நெருக்கமானவர்கள். அவருடைய குடும்பத்துக்கும், ரசிகர்களுக்கும் வலிமை உண்டாகட்டும். அவருக்காக பிரார்த்தித்த, அவருக்கு அன்பை கொடுத்த ரசிகர்களுக்கும் கன்னட மக்களுக்கும் நன்றி. அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.” என்று சூர்யா குறிப்பிட்டார்.
“புனித் குழந்தையா இருக்கும்போதுல இருந்து தெரியும்!”.. சமாதியில் நின்று அழுத சூர்யா.. வீடியோ! வீடியோ