www.garudabazaar.com
iTechUS

இது தல பொங்கல்.. கணவர் ரவீந்தருடன் நடிகை மகாலட்சுமியின் பொங்கல் கொண்டாட்டம்.. வைரல் போட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தயாரிப்பாளர் ரவீந்தர் & அவரது மனைவி மகாலட்சுமி பொங்கல் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Ravindar Mahalakshmi Pongal Celebration viral photos

Also Read | பசுவிற்கு உணவளித்து மாட்டு பொங்கல் கொண்டாடிய சினேகா, பிரசன்னா.. CUTE PHOTOS

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி ஆகியோர் சமீபத்தில் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த ஜோடிக்கு பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். 90 ஸ் கிட்ஸ் மத்தியில் ஆங்கராக நன்கு அறியப்பட்டவர் மகாலட்சுமி. இதன் பின்னர் சின்னத்திரை நடிகையாக வலம் வந்த அவர், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் அன்பே வா சீரியலிலும் நடித்து வருகிறார்.

Ravindar Mahalakshmi Pongal Celebration viral photos

தமிழில் லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில், நட்புன்னா என்னன்னு தெரியுமா,முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட சில திரைப்படங்களை தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகரன். ரவீந்தர் சந்திரசேகரன், கூர்கா, சஙகத்தமிழன் ஆகிய படங்களை வினியோகம் செய்துள்ளார்.

Ravindar Mahalakshmi Pongal Celebration viral photos

ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் குறித்து Behindwoods-ல் தனது பார்வையை முன் வைக்கும் நிகழ்ச்சி ஒன்றையும் ரவீந்திர் வழங்கி வருகிறார். மேலும், Fatman என்ற அடையாளத்தால் அறியப்படும் ரவீந்தர், இந்த பெயர் மூலம் மக்கள் மத்தியிலும் மிகப் பிரபலமானவர்.

Ravindar Mahalakshmi Pongal Celebration viral photos

திருமணத்திற்கு பிறகு அவ்வப்போது தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் ரவீந்தர். சமீபத்தில் தனது திருமணத்தின் 100வது நாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார்.

Ravindar Mahalakshmi Pongal Celebration viral photos

இந்நிலையில், நடிகை மகாலட்சுமி தனது கணவருடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்து பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார்.  மேலும் கைவினை சேலை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Also Read | விஷ்ணு விஷால் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம்.. 2nd PART குறித்து வெளியான சூப்பர் தகவல்!

Ravindar Mahalakshmi Pongal Celebration viral photos

People looking for online information on Ravindar Mahalakshmi, Ravindar Mahalakshmi Pongal Celebration will find this news story useful.