www.garudabazaar.com

மதுரைக்கு வருகை தரும் நடிகர் சூர்யா, இயக்குனர் ஷங்கர்! இதான் காரணமா? போடு வெடிய!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மதுரை மாநகருக்கு இயக்குனர் ஷங்கர், சூர்யா வருகை தர உள்ளனர்.

Suriya Director Shankar Attending Viruman Audio Launch at Madurai

Also Read | BREAKING: விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழா.. மதுரைல எங்கே நடக்குது? முழு தகவல்

2D நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்க, முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடித்துள்ள படம், ’விருமன்’. இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் , இந்தப் படம் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். இதில், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, சரண்யா, கருணாஸ், சூரி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

நடிகர் கார்த்தி நடிக்கும் ‘விருமன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரை மாநகரில் மாவட்ட நீதிமன்றம் எதிரே உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி இந்த இசை வெளியீட்டு விழா நடக்கிறது.

Suriya Director Shankar Attending Viruman Audio Launch at Madurai

இந்த விழாவில், இயக்குநர் பாரதிராஜா,  இயக்குநர் ஷங்கர், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சூரி, நடிகை அதிதி ஷங்கர், இயக்குநர் முத்தையா,

இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன்  உட்பட படக்குழுவினர் பங்கேற்கின்றனர்.

இந்த விழாவில், இரண்டு பாடல்களுக்கு மேடையில் நடனமாடுகிறார்கள். ஒரு பாடலுக்கு நடன இயக்குநர் சாண்டி குழுவினரும் மற்றொரு பாடலுக்கு விஜய் டிவி அமீர் - பாவனியும் நடனமாடுகின்றனர்.

Suriya Director Shankar Attending Viruman Audio Launch at Madurai

இப்படம் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தினை தமிழகம் முழுவதும் சக்தி பிலீம் பேக்டரி நிறுவனம் ரிலீஸ் செய்ய உள்ளது.

வரும் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தின் ’கஞ்சா பூவு கண்ணால’ பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

Suriya Director Shankar Attending Viruman Audio Launch at Madurai

Also Read | கார்த்தி நடிக்கும் 'விருமன்'.. டிரெய்லர் ரிலீஸ் எப்போ? செம்ம போஸ்டருடன் வந்த தெறி அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Suriya Director Shankar Attending Viruman Audio Launch at Madurai

People looking for online information on Karthi, Madurai, Shankar, Suriya, Viruman Audio Launch, Viruman Movie, Viruman Movie Updates will find this news story useful.