"வடிவேலு சார் தான்..." - வைரல் ஆகி வந்த மீம்ஸ்... ஒரு வழியாக ஒப்புக்கொண்ட க்யூட் ராஷ்மிகா மந்தனா.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனது புதிய போட்டோஷூட்டை வைத்து இணையத்தை கலக்கி வந்த வடிவேலு மீம்ஸ்க்கு செம ரிப்ளை கொடுத்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.

ராஷ்மிகா வடிவேலு மீம்ஸ் | rashmika mandanna reply for vadivelu memes

தெலுங்கு சினிமாவில் தற்போது இளம் கதாநாயகியாக கலக்கி வருபவர் ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், தெலுங்கு சினிமா மட்டுமின்றி தமிழிலும் பிரபலமடைந்தார். அண்மையில் மகேஷ் பாபு ஜோடியாக சரிலேறு நீக்கெவரு படத்தில் இவரது துள்ளலான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா அண்மையில் ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார். விதவிதமான ரியாக்‌ஷன் கொடுத்தப்படி அவர் எடுத்து போட்டோக்களை வடிவேலுவின் பல ரியாக்‌ஷனுடன் சேர்த்து மீம்ஸ்கள் உருவாகின. இந்த மீம்ஸ்கள் கடந்த சில தினங்களாக இணையத்தை கலக்கி வந்தன. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா, என்னால் ஒத்துக்காமல் இருக்க முடியவில்லை, வடிவேலு சார் தான் க்யூட் என பதிவிட்டுள்ளார். ராஷ்மிகாவின் இந்த ஸ்போர்டிவான பதிலுக்கு நெட்டிசன்களின் லைக் குவிந்து வருகிறது.

Entertainment sub editor