www.garudabazaar.com

வேற லெவல் கொண்டாட்டம்!.. கோலாகலமா நடந்த #RC15 பட விழா! யார் வந்துருக்காங்க பாருங்க..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர், நடிகர் ராம் சரண் நடிப்பில் இயக்கவிருக்கும் புதிய திரைப்படத்தின் துவக்க விழா இன்று கோலாகலமாக ஹைதராபாத்தில் நடைபெற்றது.

Shankar and Ram Charan RC15 SS Rajamouli Ranveer Singh

ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ராம் சரணின் தந்தையும் பிரபல நடிகருமான சிரஞ்சீவி, பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி, பிரபல ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்து இருக்கின்றனர்.

அத்துடன் இந்த படவிழாவில் இயக்குனர் ஷங்கர் மற்றும் படக்குழுவினருடன் நடிகர் ராம்சரண், இயக்குனர் லிங்குசாமி, பாடலாசிரியர் விவேக் எழுத்தாளர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தில் முக்கிய நடிகராக நடித்த தமன், ஷங்கரின் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்துக்கு இசையமைப்பது என்பது எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

பிரபல ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். அவரும் இந்த பூஜையில் கலந்துகொண்டார். சூர்யா நடித்த ‘24’ திரைப்படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்ற இவர் பேட்ட, கிரீடம், லேசா லேசா, லிட்டில் ஜான், ஹே ராம் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ராம் சரண் தவிர, கியாரா அத்வானி, ஜெயராம், சுனில், அஞ்சலி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இதேபோல் அந்நியன் படத்தின் ரீமேக் இந்தியில் உருவாகும் என ஷங்கர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அந்த திரைப்படத்தில் ஹீரோவாக ரன்வீர் சிங் நடிப்பதாகவும் ஷங்கர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் ரன்வீர் சிங், இந்த பூஜையில் கலந்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Shankar and Ram Charan RC15 SS Rajamouli Ranveer Singh

People looking for online information on Ram Charan, Ranveer Singh, RC15, Shankar, SS Rajamouli will find this news story useful.