அகில உலக சூப்பர் ஸ்டாரின் அதிரடி ஆட்டம்...! சுமோ டிரைலர் ரிலீஸ் எப்போது தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Nov 28, 2019 01:07 PM
அகில உலக சூப்பர் ஸ்டார் சிவாவின் திரைக்கதை வசனம் எழுதி நடிக்கும் ’சுமோ’ திரைப்படத்தின் டிரைலர் டிசம்பர் 10ம் தேதி வெளியாக உள்ளது.

சுமோ மல்யுத்தத்தை மையப்படுத்தி நகைச்சுவை படமாக உருவாகும் இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார். ஜப்பானை சேர்ந்த முன்னாள் சுமோ வீரர் யோசினோரி தாஷிரோ இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இப்படத்தை பிப்ரவரி 14 படத்தை இயக்கிய எஸ்.பி. ஹோசிமின் இயக்க ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். வேல்ஸ் ஃபிலிம் இண்டர்னேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார்.
வரும் டிசம்பர் 10ம் தேதி சிவாவின் பிறந்தநாள் அன்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகிறது. 2020 பொங்கலுக்கு படம் திரைக்கு வரும்.
On the Occasion of our hero "Agila Ulaga Superstar" @actorshiva 's birthday, the fun filled #SumoTrailer will be releasing On Dec 10th ! #SUMOTrailerOnDec10th @PriyaAnand @DirectorHosimin @DirRajivMenon @nivaskprasanna @VelsFilmIntl @Ashkum19 @RIAZtheboss @SonyMusicSouth pic.twitter.com/aWckJvIKX1
— Vels Film International (@VelsFilmIntl) November 28, 2019