''நேர்கொண்ட பார்வை கிளைமேக்ஸில் நான் அஜித்திற்கு...'' சீக்ரெட் சொன்ன ரங்கராஜ் பாண்டே
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 07, 2019 04:27 PM
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் நடித்து வரும் படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படம் நாளை(ஆகஸ்ட் 8) ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் குறித்து ரங்கராஜ் பாண்டே Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பொதுவா நாம் ஒருவரின் தாடியை கலாய்க்கும் போது ஆளும் தாடியும் என்போம். அது மற்றவர்களுக்கு சிரிப்பாக இருக்கும். ஆனால் கலாய்க்கும் நபர் கடுப்பாவார்.
ஆனால் அஜித் கலாய்க்கும் போது, சீக்கிரம் எல்லா தாடியும் வெள்ளையாகிடும் போல இருக்கே. என்பவார். அது நமக்கு சிரிப்பாக இருக்கும். அஜித்தோட கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருப்போம். அவர் பந்து எடுத்து போடுறது என சராசரி ஆள் போல் நடந்து கொள்வார்.
ஆனால் அவர் பேட்டிங் பண்ணும் போது சற்று நடுக்கம் இருக்கும். அவருக்கு ஸ்போர்ட்ஸ் என்றால் பிடிக்கும். எதாவது ஒரு ஸ்போர்ட்ஸை விளையாட வேண்டும் என்பார். ஸ்போர்ட்ஸில் என்ன நல்ல விஷயம் என்றால், ஜெய்த்தாலும், தோற்றாலும் எதிரணியினருக்கு கை கொடுப்போம். அது போல இந்த படத்தின் கிளைமேக்ஸில் நான் சென்று அஜித்திற்கு கைகொடுப்பேன். என்றார்.
''நேர்கொண்ட பார்வை கிளைமேக்ஸில் நான் அஜித்திற்கு...'' சீக்ரெட் சொன்ன ரங்கராஜ் பாண்டே வீடியோ