darbar USA others

ரஜினிகாந்த்தின் தர்பாரை டிவியில் Telecast பண்ணிட்டாங்க'' - தயாரிப்பு தரப்பு குற்றச்சாட்டு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'தர்பார்' திரைப்படம் கடந்த வியாழனன்று (09.01.2020) திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஸ்டார் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது. அனிருத் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

Rajinikanth, Nayanthara, Anirudh Darbar Telecast illegally on Tv

சந்தோஷ் சிவன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகி பாபு, ஸ்ரீமன், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா , காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளது. அதில், தர்பார் படத்தை மதுரை அருகில் இயங்கும் சரண்யா கேபிள் டிவி நெட் ஒர்க் நிறுவனம் சட்ட விரோதமாக ஜனவரி 12 ஆம் தேதி ஒளிபரப்பி உள்ளது.

இந்த செயல் லைக்கா நிறுவனத்துக்கும் மதுரை விநியோகிஸ்தருக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் இது தமிழ் சினிமாவின் வளர்ச்சியையும் சீரழிப்பதாகவும் உள்ளது. இதுகுறித்து காவல்துறை ஆணையரிடம் கடுமையான நடவடிக்கையை எடுக்குமாறு கோரியுள்ளது.

Entertainment sub editor