darbar USA others

சூப்பர் ஸ்டாரின் தர்பாரில் இசையமைப்பாளர் தேவாவின் பங்கு - அனிருத் வெளியிட்ட வீடியோ வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பொங்கலை முன்னிட்டு வெளியான 'தர்பார்' திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. லைக்கா புரொடக்சன்ஸ் சார்பாக சுபாஷ்கரன் தயாரித்துள்ள இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார்.

Anirudh released making video of thaliva theme music Darbar with music director Deva

அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்க, சந்தோஷ் சிவன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகி பாபு, ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த படத்துக்காகாக அனிருத் உருவாக்கிய தலைவா தீம் மியூசிக்கின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளார். ரஜினிக்காக தேனிசைத் தென்றல் தேவா இசையமைத்த தீம் மியூசிக்கை தன் இசையுடன் கோர்த்து உருவாக்கியுள்ள இந்த இசையின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வைரலாகி  வருகிறது.

Entertainment sub editor