www.garudabazaar.com

ரஜினி ரசிகர்களின் செயலுக்கு எதிராக வெளியான கண்டன அறிக்கை! முழு தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு ரஜினிகாந்த நடிக்கும் அண்ணாத்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Rajinikanth Fans Association has issued an official statement

போஸ்டர் வெளியான பொழுது பொது இடத்தில் ரஜினி ரசிகர்கள்ஆட்டை வெட்டி பர்ஸ்ட் லுக் போஸ்டர் பேனரில் அந்த ரத்தத்தை ஊற்றிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது. ரஜினி ரசிகர்கள் செய்த இந்த வினோதமான சம்பவத்தைக் கண்டதும் பொதுமக்கள் பலர் அதிர்ச்சியடைந்தனர். பல தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன.

Rajinikanth Fans Association has issued an official statement

இந்த சம்பவத்திற்கு பிறகு இப்போது, ​​அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர்கள் சங்கத்தின் நிர்வாகி சுதாகர் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளார்., அதில் 'அண்ணாத்த' திரைப்பட ஃபர்ஸ்ட் - லுக் போஸ்டர் மீது ஒரு சிலர் ஆடு வெட்டி இரத்த அபிஷேகம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி மிகவும் வருந்தத்தக்கது. அருவருப்பான இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்." என குறிப்பிடப்பட்டுள்ளது.

Rajinikanth Fans Association has issued an official statement

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன்பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு லக்னோ,கொல்கத்தா,ஐதராபாத், சென்னை பகுதிகளில் நடந்து முடிந்தது. தற்போது இந்த படத்தின் Post Production வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருவதாக ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த படத்தில் இயக்குனராக விஸ்வாசம், வேதாளம், வீரம், விவேகம், சிறுத்தை பட இயக்குனர் சிவாவும், ஒளிப்பதிவாளராக வெற்றியும், கலை இயக்குனராக மிலனும், இசையமைப்பாளராக இமானும், எடிட்டராக ரூபனும் பணிபுரிகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Rajinikanth Fans Association has issued an official statement

People looking for online information on Annaatthe, Rajinikanth will find this news story useful.