www.garudabazaar.com

'பாடல் உரையாடலின்போது'.. ஃபோட்டோவுடன் "அண்ணாத்த" பட பிரபலம் பகிர்ந்த நெகிழ்ச்சி ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தி நடிப்பில் சிறுத்தை திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சிவா, சிறுத்தை சிவா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுகிறார்.

Annaatthe song lyricist arun bharathi shares viral pic அண்ணாத்த

பின்னர் தல அஜித் குமார் நடிப்பில் வீரம், வேதாளம், விஸ்வாசம், விவேகம் உள்ளிட்ட வெற்றித்திரைப்படங்களை இயக்கி புகழ் பெற்ற சிறுத்தை சிவா ரஜினிகாந்த் நடிப்பில் தமது முதல் திரைப்படத்தை இயக்கத் தொடங்கினார். அதன்படி டி.இமான் இசையில் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் ‘அண்ணாத்த’.

கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியது. இந்த திரைப்படத்தின் வெளியீட்டுக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். வரும் நவம்பர் 4-ஆம் தேதி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அண்ணாத்த படம் வெளியாவதாக ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில் இந்த திரைப்படத்தின் பணிகள் நிறைவடைந்து வருகின்றன.

இதனிடையே இந்த திரைப்படம் தொடர்பான அப்டேட்களை இந்த திரைப்படத்தில் பணிபுரிந்த பிரபலங்கள் அவ்வப்போது வெளியிடுவதுண்டு. அந்த வகையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்ததாக நடிகர் ஜார்ஜ் மரியன், எழுத்தாளர் வேல ராமமூர்த்தி ஆகியோர் அவ்வப்போது பதிவிட்டு வந்தனர்.

முன்னதாக, தன்னுடைய டப்பிங் பணிகளை ரஜினிகாந்த் பேசி முடித்திருந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. இந்த நிலையில்தான் இந்த திரைப்படத்தில் பாடல் எழுதும் பாடலாசிரியர் அருண்பாரதி இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் இணைந்து எடுத்துள்ள ஒரு புகைப்படத்தை தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

அதில், “அண்ணாத்த திரைப்படத்தின் பாடல் தொடர்பான உரையாடலின்போது புகைப்படம் எடுக்கப் பட்டது” என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

முன்னதாக சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித்குமார் நடித்த விஸ்வாசம் திரைப்படத்தில் பாடல் எழுதியிருந்தார் அருண்பாரதி. தொடர்ந்து, நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பிலான ‘கோடியில் ஒருவன்’ திரைப்படத்திலும், நடிகர் விஜய் ஆண்டனி நடித்து, இயக்கி, இசையமைக்கும் ‘பிச்சைக்காரன்-2’ திரைப்படத்திலும் பாடல்கள் எழுதுகிறார்.

இதில் பிச்சைக்காரன்-2 படத்தின் படப்பிடிப்பு தற்போதுதான் தொடங்கியுள்ள நிலையில், கோடியில் ஒருவன் திரைப்படம் இம்மாதமான செப்டம்பர் 17-ஆம் தேதி திரையரங்குகளில் நேரடியாக வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: அதிர்ச்சி!!! சூரி வீட்டார் திருமணத்தில் 10 சவரன் நகை கொள்ளையா?.. நடந்தது என்ன? Exclusive தகவல்கள்!

Annaatthe song lyricist arun bharathi shares viral pic அண்ணாத்த

People looking for online information on Annaatthe, Arun Bharathi, D Imman, Rajinikanth, Siruthai Siva will find this news story useful.