www.garudabazaar.com

GOOSEBUMPS: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' படத்தின் தீ மாஸான மோஷன் போஸ்டர்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

.இன்று (10.09.2021) விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு ரஜினிகாந்தநடிக்கும் அண்ணாத்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

annaatthe motion poster released fans are double happy

இந்நிலையில் நேற்று ஏற்கனவே அறிவித்தபடி "அண்ணாத்த" படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியானது. மோஷன் போஸ்டர் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் எகிறச் செய்துள்ளது. மோஷன் போஸ்டரில் கொல்கத்தா ஹவுரா பாலத்தில் ராயல் என்பீல்டு பைக்கில் கையில் அருவாவுடன் பஞ்ச் டைலாக் பேசிக்கொண்டு ரஜினி தோன்றுகிறார். இந்த மோஷன் போஸ்டர் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டரை நினைவுபடுத்துவது போல் இறுதியில் வீடியோவுடன் இயக்குனர் சிவா மற்றும் குழுவினர் என்று டைட்டில் போடப்பட்டுள்ளது. 

annaatthe motion poster released fans are double happy

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன்பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு லக்னோ,கொல்கத்தா,ஐதராபாத், சென்னை பகுதிகளில் நடந்து முடிந்தது. தற்போது இந்த படத்தின் Post Production வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருவதாக ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

annaatthe motion poster released fans are double happy

இந்த படத்தில் இயக்குனராக விஸ்வாசம், வேதாளம், வீரம், விவேகம், சிறுத்தை பட இயக்குனர் சிவாவும், ஒளிப்பதிவாளராக வெற்றியும், கலை இயக்குனராக மிலனும், இசையமைப்பாளராக இமானும், எடிட்டராக ரூபனும் பணிபுரிகின்றனர்.

GOOSEBUMPS: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' படத்தின் தீ மாஸான மோஷன் போஸ்டர்!!! வீடியோ

annaatthe motion poster released fans are double happy

People looking for online information on Keerthy Suresh, Rajinikanth, Siruthai Siva will find this news story useful.