www.garudabazaar.com

TRENDING: மரண மாஸான 'அண்ணாத்த' படத்தின் வெறித்தனமான First Look போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஸ்வாசம் படத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் சிவா, ஒளிப்பதிவாளர் வெற்றி, கலை இயக்குனர் மிலன், இசையமைப்பாளர் இமான், எடிட்டர் ரூபன் மீண்டும் இணைந்த படம் 'அண்ணாத்த'.

annaatthe rajinikanth movie firstlook poster released

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன்பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு லக்னோ,கொல்கத்தா,ஐதராபாத், சென்னை பகுதிகளில் நடந்து முடிந்தது. தற்போது இந்த படத்தின் டப்பிங் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருவதாக ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

annaatthe rajinikanth movie firstlook poster released

இந்நிலையில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் இதுவரை வெளியிடப்படாமலே இருந்தது. ரசிகர்களும் இந்த படத்தின் போஸ்டருக்காக காத்திருந்தனர். தற்போது இந்த படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை சன்பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த போஸ்டரில் ரஜினிகாந்த் பட்டு வேஷ்டியில் கிராமத்து மனிதராக வருகிறார். ரஜினியை சுற்றி கோயில் மணி கட்டப்பட்டுள்ளது. பக்காவான கமர்சியல் படத்துக்கான போஸ்டராக வெளியாகி உள்ளது. வெளியான சில மணி நேரத்திலேயே டிவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

annaatthe rajinikanth movie firstlook poster released

People looking for online information on Rajinikanth, Siruthai Siva will find this news story useful.