திபான்கர் டி (Dipankar De) பெங்காலி மொழியில் பிரபலமான நடிகர் ஆவார். 75 வயதாகும் இவர் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் மூலம் ரசிகர்களுக்கு மிகவும் பரீட்சையமானவர். இவர் டோலோன் ராய் (Dolon Roy) என்ற நடிகையுடன் நீண்ட கால உறவில் இருந்து வந்துள்ளார்.

இதனையடுத்து கடந்த ஜனவரி 16 ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இருவரது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இருவருக்கும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.
இந்நிலையில் நடிகர் திபான்கர் தனது திருமணத்திற்கு அடுத்த நாள் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அவர் உடல் நலம் தேறி வருகிறாராம்.
Tags : Depankar De, Bengali, Dolon Roy