www.garudabazaar.com

"இந்த நேரத்துல அவர் உயிரோடு இல்லாம போனது..".. இந்திய அரசின் உயரிய விருது.. ரஜினிகாந்த் உருக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ரஜினிகாந்த் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக சினிமாவில் மிளிர்ந்து வரும் மாஸ் நட்சத்திரம்.

rajinikanth Dada saheb Phalke Award says missing K Balachander

சூப்பர் ஸ்டார் என்று அன்போடு மக்களால் அழைக்கப்படும் ரஜினிகாந்த்துக்கு இந்திய சினிமாவுக்கு அளித்த பங்களிப்பிற்காக, இந்திய அரசின் மதிப்புமிக்க உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக, கடந்த ஏப்ரல் 2021-ல், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்திருந்தார்.

ஆனால் கொரோனா சூழலால் இந்த விருது வழங்கும் நிகழ்வு தாமதமான நிலையில், அக்டோபர் 25, 2021 அன்று டெல்லியில் இவ்விழா நடைபெறுவதாக ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் உள்ள தமது வீட்டிற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ரஜினிகாந்த்,  “இந்த விருதை வென்றதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார். மேலும் அந்த சமயம், உணர்ச்சிவசப்பட்ட ரஜினிகாந்த், தனது குருநாதர் கே.பாலச்சந்தரை மிஸ் பண்ணுவதாக குறிப்பிட்டார்.

இது தொடர்பாக கூறிய அவர், “எனக்கு இந்த விருது கிடைக்கும்போது கேபி சார் (கே.பாலச்சந்தர்) உயிருடன் இல்லை என்று வருத்தப்படுகிறேன்” என்று கூறினார். 1975-ல் மறைந்த இயக்குனர் கே பாலசந்தரின் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் மதிப்புமிக்க தாதாசாகேப் பால்கே விருதைப் பெறுவதற்கு முன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது வாழ்க்கையின் முக்கியமான நபரான கே.பாலச்சந்தர் இல்லாதது குறித்து பேசி உணர்ச்சிவசப்பட்டுள்ளார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 25-ஆம் தேதி தனக்கு 2 முக்கியமான நிகழ்வுகள் இருப்பதாக கூறியுள்ளார்.

அதில், “அக்டோபர் 25-ஆம் தேதி எனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது. ஒன்று மக்களின் அன்பினாலும் ஆதரவினாலும் திரை உலகின் உயர்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருதை மத்திய அரசு எனக்கு வழங்க உள்ளது.

இரண்டாவது என்னுடைய மகள் சௌந்தர்யா விசாகன், அவருடைய சொந்த முயற்சியில் மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய HOOTE என்கிற APP-ஐ உருவாக்கி அதை அறிமுகப்படுத்த உள்ளார். அதில் மக்கள் தாங்கள் மற்றவர்களுக்கு எழுத்து மூலம் தெரிவிக்க விரும்பும் கருத்துக்களையும், விஷயங்களையும் இனி அவர்களது குரலிலேயே எந்த மொழியிலும் HOOTE APP மூலமாக பதிவிடலாம்.

இந்த வரவேற்கத்தக்க புதிய முயற்சியான HOOTE APP-ஐ என் குரலில் பதிவிட்டு துவங்க உள்ளேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Also Read: வந்தாச்சு “வா சாமி..”.. ரஜினியின் அனல் தெறிக்கும் ‘அண்ணாத்த’ பட 4வது சிங்கிள்!

தொடர்புடைய இணைப்புகள்

rajinikanth Dada saheb Phalke Award says missing K Balachander

People looking for online information on Annaatthe, Dadasahebphalkeaward, K Balachander, Rajinikanth will find this news story useful.